நைனித்தால்

ஆள்கூறுகள்: 29°23′31″N 79°27′15″E / 29.39194°N 79.45417°E / 29.39194; 79.45417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைனித்தால்
நகரம்
Image of Nainital from route to cheena peak
Nainital Lake
Church of St. John in the Wilderness
Naina Devi Temple
Raj Bhavan, Nainital
St. Joseph's College, Nainital
மேலிருந்து கடிகார திசையில்:
நைனிதால், யுகே, சீனா சிகரப் பாதையில் இருந்து, நைனி ஏரி, நைனா தேவி கோயில், செயின்ட் ஜோசப் கல்லூரி, ராஜ் பவன் மற்றும் செயின்ட் ஜான் தேவாலயத்தில் உள்ள குமாவோனி படகோட்டிகள்
அடைபெயர்(கள்): குமாவோனின் ஆபரணம்[1]
நைனித்தால் is located in உத்தராகண்டம்
நைனித்தால்
நைனித்தால்
Location in Uttarakhand, India
நைனித்தால் is located in இந்தியா
நைனித்தால்
நைனித்தால்
நைனித்தால் (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°23′31″N 79°27′15″E / 29.39194°N 79.45417°E / 29.39194; 79.45417
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்டம்
கோட்டம்குமாவுன்
மாவட்டம்நைனித்தால்
பெயர்ச்சூட்டுநைனித்தால் ஏரி
அரசு
 • வகைமாநகர மன்றம்
 • நிர்வாகம்நைனிதால் மாநகரட்சி
பரப்பளவு[2]
 • மொத்தம்11.73 km2 (4.53 sq mi)
ஏற்றம்2,084 m (6,837 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்41,377
 • அடர்த்தி3,500/km2 (9,100/sq mi)
இனங்கள்Nainitalites(English) Naintalwal (Kumaoni)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகஇந்தி[3]
 • அதிகாரப் பூர்வ துணை மொழிசமசுகிருதம்[4][5]
 • பிராந்தியம்Kumaoni[6]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்263001/263002
தொலைபேசி குறியீடு+91 - 5942
வாகனப் பதிவுUK-04
இணையதளம்nainital.nic.in

நைனிதால் (Nainital, pronounced [nɛnːtaːl] ) என்பது இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தில் உள்ள குமாவுன் கோட்டத்தின், நைனித்தால் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகரம் மற்றும் மாவட்ட தலைமையகம் ஆகும். இது உத்தராகாண்ட மாநிலத்தின் நீதித்துறை தலைநகரமும் ஆகும். மாநிலத்தின் உயர் நீதிமன்றம் இங்கு அமைந்துள்ளது. மேலும் இதே பெயரிலான மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். இந்த நகரில் மாநில ஆளுநர் வசிக்கும் ஆளுநர் மாளிகை உள்ளது. [7] நைனிதால் ஐக்கிய மாகாணங்களின் கோடைகால தலைநகராக இருந்தது. [8] .

நைனிதால் மாநில தலைநகரான தோராதூனில் இருந்து 345 km (214 mi) தொலைவிலும், இந்தியாவின் தலைநகரான புது தில்லிருந்து 285 km (177 mi) தொலைவிலும் இமயமலையின் குமாவுன் அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 1,938 மீட்டர்கள் (6,358 அடி) ) உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் கண் வடிவ ஏரியைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த ஏரி தோராயமாக இரண்டு மைல் சுற்றளவு மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. அவற்றில் மிக உயர்ந்த சிகரம் மேற்கில் உள்ள நைனா சிகரம் ( 2,615 m (8,579 அடி) ) ) ஆகும், மேற்கில் தியோபாதா சிகரம் ( 2,438 m (7,999 அடி) ), தெற்கில் ஆயர்பாதா சிகரம் ( 2,278 m (7,474 அடி) ) ஆகியவை உள்ளன. இந்த உயரமான சிகரங்களின் உச்சியில் இருந்து, "தெற்கே பரந்த சமவெளி அல்லது இமயமலையின் பெரும் பனிச் சரிவுகளைக் கொண்டு வடக்கே அமைந்துள்ள சிக்கலான முகடுகளின் அற்புதமான காட்சி அழகைக் காணலாம்." [9] இந்த மலைவாழிடம் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

புவியியல் மற்றும் காலநிலை[தொகு]

நிலப்பரப்பு[தொகு]

நைனிதால் நகரின் மொத்த பரப்பளவு 11.73 km2 (4.53 sq mi) ஆகும். மேலும் இதன் அமைவிடம் 29°23′N 79°27′E / 29.38°N 79.45°E / 29.38; 79.45 ஆகும். [10] இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2,084 மீட்டர் (6,837 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. அருகில் உயரமான மலைகளும் உள்ளன. அருகிலுள்ள மிக உயரமான இடம் நைனா சிகரம் ஆகும், அதன் உயரம் 2,619 m (8,593 அடி) ஆகும் . இந்த நகரம் மாநிலத் தலைநகர் தேராதூனில் இருந்து 285 கிமீ (177 மைல்) தொலைவிலும், இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் இருந்து 345 கிமீ (214 மைல்) தொலைவிலும்,இமயமலையின் குமாவுன் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

ஏரியின் கீழ் முனையான தல்லிடலில் இருந்து நைனிதாலின் அழகிய காட்சி.

இந்த நகரம் நைனித்தால் ஏரியைச் சுற்றியுள்ள ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளளது. இது ஒரு கண் வடிவ ஏரி ஆகும், இந்த ஏரி 1,940 மீ (6,350 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி 1,433 m (1,567 yd) நீளமும், 463 m (506 yd) அகலத்தோடு, சுமார் இரண்டு மைல் சுற்றளவு கொண்டதாக உள்ளது. [11] ஏரியின் ஆழமான இடமான பாஷான்தேவிக்கு அருகில் 85 மீ (93 அடி) ஆழமானதாக உள்ளது. ஏரியின் முக்கிய நீராதாரமாக மூன்று வற்றாத வடிகால்கள் உட்பட 26 பெரிய வாய்க்கால்கள் ஏரிக்கு நீரளிக்கின்றன.

நைனிதால் நகரானது அயர்பட்டா ( 2,344 m (7,689 அடி) ), தேவ்பதா ( 2,435 m (7,989 அடி) ), ஹண்டிபாண்டி ( 2,180 m (7,153 அடி) ), சினி, ( 2,612 m (8,568 அடி) ), அல்மா ( 2,430 m (7,980 அடி) ), லாரிய காந்தா ( 2,482 m (8,144 அடி), ஷெர்கா தண்டா ( 2,398 m (7,869 அடி) ) ஆகிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. [11]

புவியியல்[தொகு]

ஏரியைச் சுற்றியுள்ள செங்குத்தான மலைச் சரிவுகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது. பல்வேறு புவியியல் மற்றும் மனித செயல்பாட்டுக் காரணிகளால் சரிவுகள் ஏற்படுகின்றன. இவை வெகுஜன மக்களை மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. நைனிதாலில் அறியப்பட்ட முதல் நிலச்சரிவு 1866 இல் நைனிடால் அல்மா மலையில் ஏற்பட்டது, மேலும் 1879 இல் அதே இடத்தில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. 1880 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி நைனிதாலில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது, இதன் விளைவாக 151 பேர் சரிவுகளுக்கு அடியில் புதைந்து போயினர். [12] நைனிடால் பள்ளத்தாக்குக்கு வெளியே 1898 ஆகத்து 17 அன்று மற்றொரு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. [13]

பனிப்பொழிவுக்குப் பிறகு நைனிதாலில் காடு (2020)

காலநிலை[தொகு]

நைனிதால் நகரத்தின் காலநிலை கோப்பென் காலநிலை வகைப்பாடு முறையின்படி துணை வெப்பமண்டல ஐலேண்ட் காலநிலையை கொண்டுள்ளது. தெற்காசியப் பருவக்காற்று முறையின் காரணமாக, குளிர்காலத்தில் நகரம் சற்று வறண்டதாகவும், கோடையில் மிகவும் ஈரப்பதமானதாகவும் இருக்கும். நவம்பரில் 7.9 மில்லிமீட்டர்கள் (0.31 அங்குலம்) என மிகக் குறைந்த மழைப்பொழிவு இருக்கும். அதே சமயம் சூலையில் அதிகபட்ச மழைப்பொழிவு 725 மில்லிமீட்டர்கள் (28.5 அங்குலம்) என பதிவாகியுள்ளது.மிதவெப்ப மண்டலத்தில் உள்ள பெரும்பாலான இடங்களைப் போலவே, நைனிதாலிலும் ஒப்பீட்டளவில் வெப்பம் குறைந்ததாக கோடைக் காலம் உள்ளது. வெப்பமான மாதமான சூலை மாதத்தில், வெப்பநிலை 16.4 °C (61.5 °F) முதல் இருக்கும் முதல் 23.5 °C (74.3 °F) வரை இருக்கும். குளிரான மாதமான சனவரியில் வெப்பநிலை 1.7 °C (35.1 °F) முதல் 10.7 °C (51.3 °F) வரை இருக்கும். நைனிதாலில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக 30 °C (86 °F) 18 சூன் 1972 அன்று பதிவு செய்யப்பட்டது. அதே சமயம் குறைந்த வெப்பநிலை −5.6 °C (21.9 °F) ஆக 17 சனவரி 1953 அன்று பதிவு செய்யப்பட்டது.

நைனிதாலில் குளிர்காலம் நவம்பர் நடுப்பகுதியில் தொடங்கி மார்ச் நடுப்பகுதி வரை நீடிக்கும். நவம்பர் மாதத்திலிருந்து வெப்பநிலை படிப்படியாகக் குறையும். சனவரி மிகவும் குளிரான மாதமாக இருக்கும். திசம்பர் மற்றும் சனவரி மாதங்களில் பனி மற்றும் மூடுபனி பொதுவாக காணப்படும். மேற்குத் தொடர்ச்சியின் மழையின் காரணமாக அவ்வப்போது பரவலாக மழையும் பொழிகிறது. மேலும் சிகரங்களில் 2000 மீட்டருக்கும் அதிகமாக பனிப்பொழிவு ஏற்படுகிறது. குளிர்கால மழையானது சில நேரங்களில் சூறாவளியால் பொழிகிறது. இருப்பினும், வெப்பநிலை பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் பாதியில் அதிகரிக்கும் நிலை உள்ளது. மார்ச் நடுப்பகுதியில், வெப்பநிலையில் கடும் உயர்வு உள்ளது. இது கோடைகாலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பகலில் சற்று வெப்பமாக இருக்கும் போதும், இரவுகள் தொடர்ந்து குளிர்ச்சியாகவே இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை பதிவான மே மற்றும் சூன் தொடக்கத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் ஆலங்கட்டி மழை பொழியும் காலம் ஆகும். அச்சமயம் ஒரு குறுகிய காலம் குளிர்ச்சியாக இருக்கும்.

மலைகளில் கோடைக்காலம் சமவெளி பகுதியை விட ஒப்பீட்டளவில் முன்னதாகவே வந்துவிடும். மேலும் இது மிகவும் நீண்டதாகவும், ஈரப்பதமானதாகவும் இருக்கும். சூலை மற்றும் ஆகத்து மாதங்களில் சராசரி வெப்பநிலை குறைந்து, இந்த பருவத்தில் ஈரப்பதம் திடீரென உயரும். பருவமழை வழக்கமாக மே மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி, அக்டோபர் நடுப்பகுதி வரை பெய்யும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், நைனிதால் (1961–1979, extremes 1953–1979)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 18.4
(65.1)
21.7
(71.1)
24.6
(76.3)
28.0
(82.4)
29.6
(85.3)
30.0
(86)
26.1
(79)
26.6
(79.9)
24.6
(76.3)
24.8
(76.6)
21.4
(70.5)
21.8
(71.2)
30.0
(86)
உயர் சராசரி °C (°F) 10.9
(51.6)
11.9
(53.4)
16.1
(61)
20.7
(69.3)
23.2
(73.8)
23.4
(74.1)
21.7
(71.1)
21.0
(69.8)
20.5
(68.9)
18.8
(65.8)
15.3
(59.5)
12.8
(55)
18.0
(64.4)
தாழ் சராசரி °C (°F) 1.7
(35.1)
3.3
(37.9)
7.3
(45.1)
11.8
(53.2)
14.3
(57.7)
16.2
(61.2)
16.3
(61.3)
16.0
(60.8)
13.7
(56.7)
9.7
(49.5)
5.8
(42.4)
2.9
(37.2)
9.9
(49.8)
பதியப்பட்ட தாழ் °C (°F) -5.6
(21.9)
-4.3
(24.3)
-3.0
(26.6)
0.0
(32)
5.0
(41)
10.0
(50)
10.4
(50.7)
9.6
(49.3)
4.4
(39.9)
0.5
(32.9)
-1.1
(30)
-4.4
(24.1)
−5.6
(21.9)
மழைப்பொழிவுmm (inches) 82.4
(3.244)
66.1
(2.602)
57.1
(2.248)
33.8
(1.331)
72.4
(2.85)
339.1
(13.35)
685.4
(26.984)
556.4
(21.906)
346.3
(13.634)
54.7
(2.154)
7.7
(0.303)
23.9
(0.941)
2,305.3
(90.76)
ஈரப்பதம் 65 60 53 49 48 66 82 84 79 65 62 59 64
சராசரி மழை நாட்கள் 3.5 3.9 3.5 2.8 4.7 12.8 20.4 19.8 11.1 2.8 0.5 1.4 87.2
ஆதாரம்: India Meteorological Department[14][15]

மக்கள்தொகையியல்[தொகு]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
18816,576—    
18918,455+28.6%
19017,609−10.0%
191110,270+35.0%
192111,230+9.3%
19319,741−13.3%
19419,539−2.1%
195112,350+29.5%
196114,495+17.4%
197123,986+65.5%
198124,835+3.5%
199129,837+20.1%
200138,630+29.5%
201141,377+7.1%
நைனி ஏரியில் ஒரு பூர்வீக படகோட்டி.

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நைனிதாலின் மக்கள் தொகை 41,377 ஆகும். [16] மக்கள்தொகையில் ஆண்கள் 52.3% மற்றும் பெண்கள் 47.7% ஆவர். இது 1000 ஆண்களுக்கு 911 பெண்கள் என்ற பாலின விகிதத்தை கொண்டதாக உள்ளது. இது உத்தரகண்ட மாநில சராசரியான 1000 ஆண்களுக்கு 963 பெண்கள் என்ற விகிதத்தை விட குறைவாக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 3527.45 பேர். ஒரு சதுர கி.மீ.க்கு சராசரியாக 795.31 குடும்பங்கள் என்ற அளவில் நகரத்தில் 9,329 வீடுகள் உள்ளன. மக்களில் 9.54% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள். 2011 ஆம் ஆண்டில், நைனிதாலின் சராசரி கல்வியறிவு விகிதம் 92.93% ஆகும், இது உத்தரகண்ட மாநில சராசரியான 78.82% ஐ விட அதிகம். நகரத்தில் 96.09% ஆண்களும் 89.47% பெண்களும் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். [16]

1880 செப்டம்பரில் எடுக்கப்பட்ட ஒரு சிறப்பு மக்கள்தொகை கணக்கெடுப்பில், சுற்றுலாப் பருவத்தின் உச்சத்தில், நகரத்தின் மொத்த மக்கள் தொகை 10,054 ஆகும். இருப்பினும், 1881 பெப்ரவரியில் உத்தியோகபூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை குறைவாக 6,576 என இருந்தது. அடுத்த தசாப்தத்தில் மக்கள் தொகை சிறிது உயர்ந்தது, 1891 இல் 8,455 ஆக உயர்ந்தது. 1901 இல் 7,609 ஆகக் குறைந்த பிறகு, அடுத்து வந்த இரண்டு தசாப்தங்களில் அது நிலையாக இருந்தது; 1911 இல் 10,270, 1921 இல் 11,230, 1931 மற்றும் 1941 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் முறையே 9,741 மற்றும் 9,539 மக்கள்தொகை இருந்தது. மக்கள்தொகை இடையில் வீழ்ச்சி அடைந்தது என்றாலும் ஆனால் அதன்பின்னர் தொடர்ச்சியாக உயர்வைக் கண்டது. அடுத்தடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளில் 1951 இல் 12350, 1981 இல் 24835, 1991 இல் 29837, 2001 இல் 38630, 2011 இல் 41377 என வளர்ந்து வருகிறது.

Religions in Nainital[16]
Religion Percent
இந்து
85.61%
முஸ்லிம்
11.91%
சீக்கியர்
0.75%
Christian
0.92%
பிறர்†
0.8%

நைனிதாலில் இந்து சமயம் மிகப்பெரிய சமயமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 85.61% மக்கள் இந்துக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நைனிதாலில் முஸ்லிம், சீக்கிய, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் உள்ளனர். நைனிதால் நகரில் இசுலாம் இரண்டாவது பிரபலமான சமயமாக உள்ளது. தோராயமாக 11.91% இசுலாமை பின்பற்றுகின்றனர். அதற்கடுத்து கிறிஸ்தவம் 0.92%, சைனம் 0.01%, சீக்கியம் 0.75%, பௌத்தம் 0.77% ஆகய சமயங்கள் பின்பற்றப்படுகின்றன. ஏறத்தாழ 0.02% மக்கள் நாத்திகர்கள் அல்லது 'குறிப்பிட்ட சமய எதுவும் இல்லை' என்பவர்களாக உள்ளனர். 1880 இல் நைனிதாலின் மக்கள் தொகை 10,054 ஆகும், இதில் 6,862 இந்துக்கள், 1,748 முஸ்லிம்கள், 1,348 ஐரோப்பியர்கள், 34 யூரேசியர்கள், 57 பூர்வீக கிறிஸ்தவர்கள், 5 'மற்றவர்கள்' இருந்தனர்.

மொழிகள்[தொகு]

இந்தி அதிகாரப்பூர்வ மொழியாகும், சமசுகிருதம் நகரத்தின் கூடுதல் அதிகாரப்பூர்வ மொழியாகும். குமாவோனி உள்ளூர் மொழியாகவும், ஊரில் அதிகம் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. [6] இந்தி மற்றும் ஆங்கிலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இடையே இணைப்பு மொழியாக செயல்படுகின்றது.

தொன்மவியல்[தொகு]

நைனி ஏரியானது 51 சக்தி பீடங்களில் ஒன்று என்று நம்பப்படுகிறது. இது தாட்சாயிணியின் மரணத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டது. தாட்சாயணி இறந்த துக்கத்தினாலும் சோகத்தினாலும், சிவன் தாட்சாயணியின் உடலைச் சுமந்துகொண்டு, தம்பதியராக இருந்த தருணங்களை நினைவுகூர்ந்து, அதனுடன் பிரபஞ்சத்தை சுற்றி வந்தார். விஷ்ணு அவளது உடலை தனது சுதர்சன சக்கரத்தைப் பயன்படுத்தி 52 பாகங்களாக வெட்டினார். அவளின் உடல் பாகங்கள் பூமியில் விழுந்த பகுதிகளை தேவியை வணங்கும் புனித தளங்களாக மாறின. தாட்சாயணியின் வலது கண் விழுந்த இடம் நைன்-தால் அல்லது கண் ஏரி என்று அழைக்கப்படுவதாக உள்ளது. இன்றைய ஏரியின் வடக்குக் கரையில் உள்ள நைனி மாதா கோயில் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் நைனா தேவி கோயிலில் சக்தி தேவி வழிபடப்படுகிறாள். [17]

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Nainital: The jewel of Kumaon". The Economic Times. https://m.economictimes.com/consumer-life/nainital-the-jewel-of-kumaon/articleshow/5758445.cms. 
  2. District Census Handbook Nainital Part-A. Dehradun: Directorate of Census Operations, Uttarakhand. http://www.censusindia.gov.in/2011census/dchb/0511_PART_A_DCHB_NAINITAL.pdf. 
  3. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா). p. 18. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 22 December 2018.
  4. Trivedi, Anupam (19 January 2010). "Sanskrit is second official language in Uttarakhand". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 1 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120201065836/http://www.hindustantimes.com/India-news/NorthIndia/Sanskrit-is-second-official-language-in-Uttarakhand/Article1-499467.aspx. 
  5. "Sanskrit second official language of Uttarakhand". The Hindu. 21 January 2010 இம் மூலத்தில் இருந்து 3 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180303145846/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/Sanskrit-second-official-language-of-Uttarakhand/article15965492.ece. 
  6. 6.0 6.1 "Kumaoni". Ethnologue (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 March 2022.
  7. "Home: Raj Bhavan, Uttarakhand, India". governoruk.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 December 2020.
  8. "History: History". governoruk.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 December 2020.
  9. Nainital District, The Imperial Gazetteer of India, volume 18, pp. 322–323. 1908
  10. Falling Rain Genomics, Inc – Nainital.
  11. 11.0 11.1 Pande 1993
  12. Murphy 1906
  13. Murphy 1906
  14. "Station: Nainital Climatological Table 1961–1990" (PDF). Climatological Normals 1961–1990. India Meteorological Department. July 2010. pp. 581–582. Archived (PDF) from the original on 16 February 2020. பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
  15. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M227. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
  16. 16.0 16.1 16.2 Nainital Population Census 2011.
  17. View of Mallital, without the presend Naina Devi Temple (1865) British Library.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைனித்தால்&oldid=3759687" இலிருந்து மீள்விக்கப்பட்டது