1891 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1891 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
1891 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
பொதுத் தகவல்
நாடுபிரித்தானியாவின் இந்தியப் பேரரசு பிரித்தானிய இந்தியா
முடிவுகள்
மொத்த மக்கள் தொகை287,000,000[1]

இந்தியாவின் 1891 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பானது பிரித்தானிய அரசால் நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பானது  இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், பர்மா ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நடத்தப்பட்டது.[2] இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது ஜெர்விஸ் அத்தேல்ஸ்டேனே பெயின்ஸ் என்பவர் ஆணையாராக இருந்தார். பைன்ஸ் 1881 கணக்கெடுப்பின்போது பயன்படுத்தப்பட்ட வகைப்பாட்டிலிருந்து மாற்றியமைத்தார். ராயல் புள்ளியியல் சமுதாயம் என்ற பத்திரிக்கையில் அவரது நினைவுக் குறிப்பு கட்டுரை வெளிவந்தது. அதில்   "மதத்திலிருந்து சாதியை பிரிப்பது, இரண்டாவதாக, தொழிலை மையமாக மக்களை மாற்றுவது ஆகியவை" என்று மாற்றங்கள் விவரிக்கப்பட்டது. இதன் விளைவாக 300-பக்க பொது அறிக்கையை எழுதினார், இது "இலக்கிய வாசனை மற்றும் பரந்த புலமை" அடிப்படையில் புள்ளி விவரங்கள் பகுத்தாய்வை விளக்கினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Baines, Jervoise Athelstane (10 July 1893) (in en). General Report on the Census of India, 1891. London, Her Majesty's Stationery Office. https://ruralindiaonline.org/en/library/resource/general-report-on-the-census-of-india-1891/. பார்த்த நாள்: 4 May 2021. 
  2. Database: General report on the Census of India, 1891, Page 199
  3. R.H.R.; S. de J. (January 1926). "Obituary: Sir Athelstane Baines, C.S.I.". Journal of the Royal Statistical Society (London: Royal Statistical Society) 89 (1): 182–184. http://www.jstor.org/stable/2341501.