உள்ளடக்கத்துக்குச் செல்

பனிப்பூச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளிர்காலத்தில் மரத்தில் காணப்படும் பனிப்பூச்சு

நீராவியானது வளியில் நிரம்பல் நிலையை அடையுமாயின், உறைந்து பனித்தூளாக மாறி வேறு பொருட்களில் திண்ம வடிவில் படியும்போது அது பனிப்பூச்சு (Frost) என்றழைக்கப்படும். நீரின் உறைநிலைக்கும் குறைவான வெப்பநிலையில் திண்ம மேற்பரப்புக்கள் இருக்கும்போது, அதன் சுற்றுப்புறத்தில் நீராவி நிரம்பல் நிலைக்கு வருமாயின் பனிப்பூச்சாகப் படியும். இந்தப் பனிப்பூச்சுப் படிகங்களின் அளவு கிடைக்கும் நீராவியின் அளவில் தங்கியிருக்கும். இது சில சமயம் ஒளியூடு புகவிடும் தன்மையைக் கொண்டிருக்கலாம். இவ்வாறான பனிப்பூச்சு பழங்களில் ஏற்பட்டால் அவை பாதிப்புக்குள்ளாகும்.

படத்தொகுப்பு

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிப்பூச்சு&oldid=2914360" இலிருந்து மீள்விக்கப்பட்டது