உறைதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியல், வேதியியல் வரையரைகளின் படி ஒரு நீர்மம் திண்மமாக மாறும் செயல் உறைதல் எனப்படுகிறது. இது திண்மமாதல் எனவும் அழைக்கப் படும். பல பொருட்கள் உறைநிலை அடையும்போது முன்பிருந்த பருமனைவிடச் சற்றுச் சுருங்கிக் குறையும். ஆனால் நீர் உறைந்து பனிக்கட்டியாகும்போது விரிவடைகிறது. எந்த வெப்பநிலையில் ஒரு பொருளானது உறைகிறதோ அதுவே அப்பொருளின் உறைநிலை எனப்படுகிறது, ஆனால் இந்த உறை வெப்பநிலை, பொருள் இருக்கும் சூழ் அழுத்தநிலையைப் பொருத்தும் உள்ளது. பொருள்களின் மாசுத்தன்மையினை அதனதன் உறைதல் வெப்பநிலையைக் கொண்டு அறியப்படுகின்றன. மாசு கலந்த பொருட்களின் உறைநிலை குறைந்து காணப்படும். இதுவே உறைநிலைத் தாழ்வு என அழைக்கப்படுகிறது. உறை நிலைத் தாழ்வு கணக்கீடுகளின் மூலம் பொருளின் மூலக்கூறு எடை கண்டறியப்படுகிறது. திண்மத்தில் இருந்து நீர்மத்திற்கு மாறும் செயலான உருகுதல் இதற்கு நேர்மாறான செயல் ஆகும். பெரும்பாலான பொருட்களுக்கு உறைநிலையும் உருகுநிலையும் ஒரு குறிப்பிட்ட அழுத்தநிலையில் ஒன்றாகவே உள்ளது.

(எ.கா) பாதரசத்தின் உறைநிலையும் உருகுநிலையும் ஒன்றே.

உணவு பதப்படுத்தல்[தொகு]

உணவினை பதப்படுத்த உறைதல் முறையே பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. இது நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதால் உணவு கெடாமல் காக்கப் படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறைதல்&oldid=3052019" இருந்து மீள்விக்கப்பட்டது