மணா கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணா கணவாய்
Mana Pass
Mana Village, Badrinath, Uttarakhand, India.jpeg
மணா கிராமம், பத்ரிநாத், உத்தரகாண்ட், இந்தியா
ஏற்றம்5,608 மீ (18,399 அடி)
(SRTM2)
அமைவிடம்சீனாஇந்தியா எல்லை
மலைத் தொடர்இமயமலை
ஆள்கூறுகள்31°04′06″N 79°25′00″E / 31.06833°N 79.41667°E / 31.06833; 79.41667ஆள்கூற்று: 31°04′06″N 79°25′00″E / 31.06833°N 79.41667°E / 31.06833; 79.41667
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Tibetan Plateau" does not exist.

மணா கணவாய் (Mana Pass) இந்தியா மற்றும் திபெத் நாடுகளின் எல்லைக்கு நடுவே இமயமலையில் 5632 மீட்டர் (18478 அடி) உயரத்தில் அமைந்துள்ள ஒரு மலைக்கணவாய் ஆகும். இதை மணா லா, சிர்பிட்யா, சிர்பிட்யா லா அல்லது துங்கிரி லா என்ற பெயர்களாலும் அழைப்பார்கள் [1]. இப்போது இக்கணவாய் வாகனங்கள் செல்லக்கூடிய உலகின் மிக உயர்ந்த கணவாய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கணவாய் 2005-2010 ஆம் ஆண்டுகள் காலகட்டத்தில் இந்திய இராணுவத்திற்காக எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு மூலமாக கட்டப்பட்ட ஒரு சாலையைக் கொண்டுள்ளது. கூகிள் எர்த் போன்ற உலக காட்சி உருவத் தொகுதியில் 2011 ஆம் ஆண்டிலிருந்து காணப்படுகிறது [2]. திபெத்திய பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை விட இந்தியப் பகுதியில் நன்கு தரப்படுத்தப்பட்ட சரளை நிரவல் சாலை அதிகமாக உள்ளது. எல்லையின் இந்தியப் பக்கத்தில் 5,610 மீட்டர் (18,406 அடி) உயரத்திலிருந்து 252 மீட்டர் மேற்கில் 5,632 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது,

புவியியல்[தொகு]

நந்தாதேவி தேசியப் பாதுகாப்புப் பூங்காவிற்கு உள்ளேயே மணா நகரத்திற்கு வடக்கில் 24 கிலோமீட்டர் தொலைவிலும், உத்தரகாண்டில் உள்ள இந்துகளின் புனித நகரான பத்ரிநாத்திற்கு மேற்கே 52 கி.மீ. தொலைவிலும் மணா கணவாய் அமைந்துள்ளது. இக்கணவாய் கங்கை ஆற்றின் நீண்ட துணை நதியான சரசுவதி ஆறு, அலக்நந்தா ஆறு போன்ற ஆறுகளின் உற்பத்தி மூலமாகவும் உள்ளது[3]. கணவாய் மற்றும் தியோ தால் ஏரிக்கு இடையில் பல அழகிய சிறிய குளங்கள் வழியாக இந்த நதி சிற்றோடையாகக் கடந்து செல்கிறது. கங்கோத்ரி மலைத் தொகுதியிலுள்ள சவ்காம்பா சிகரத்தை அடைவதற்கான முக்கிய வழியாகவும் இக்கணவாய் கருதப்படுகிறது. மணிபத்ரா ஆசிரமம் என்ற பண்டைய பெயரிலிருந்து மணா என்ற பெயர் தருவிக்கப்பட்டுள்ளது [3].

வரலாறு[தொகு]

உத்தரகாண்ட் மற்றும் திபெத்திற்கு இடையே மணா கணவாய் பண்டைய வணிக பாதையாக இருந்துள்ளது. பத்ரிநாத்தில் தொடங்கி மேற்கு திபெத்திலிருந்த குகே இராச்சியம் வரை இக்கணவாய் இருந்துள்ளது. 1624-இல் மணா கணவாய் வழியாக திபெத்திற்குள் நுழைந்ததாக அறியப்படும் முதல் ஐரோப்பியர்கள் அந்தோனியோ டி அன்ரேட் மற்றும் மானுவேல் மார்கசு ஆகியோராவர். 1951-இல் இந்த பாதை மூடப்படும் வரை ஒரு சிறிய வணிக பாதையாக தொடர்ந்து சீனர்கள் பயன்படுத்தியுள்ளனர். 1954 ஏப்ரல் 29-இல் இந்தியா மற்றும் சீனா கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, புனிதயாத்திரை மற்றும் உள்ளூர் பயணிகளுக்கு மட்டும், மணா கணவாய் வழியே பயணிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

அணுகுதல்[தொகு]

பாசில்காவை பத்ரிநாத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை-7 விரிவு மூலம் தெற்கே இக்கணவாயை அடையலாம், ஆர்வமிக்க இரு-சக்கர ஓட்டுனர்கள் இப்பாதையில் அடிக்கடி சென்று வருகின்றனர். இராணுவத்தினர் அல்லாத மோட்டார் வண்டி சங்க உறுப்பினர்கள் மணா கணவாயின் உயரங்களை அளவிட்டு லிம்கா புத்தகத்தின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. GeoNames. "Ma-na Shan-k’ou". பார்த்த நாள் 2009-06-23.
  2. "Women bikers attempt record at Mana Pass". பார்த்த நாள் 9 June 2017.
  3. 3.0 3.1 "Tourism in Mana, India". பார்த்த நாள் 2009-06-23.
  4. "Limca Book of Records".

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணா_கணவாய்&oldid=2778820" இருந்து மீள்விக்கப்பட்டது