எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு
சுருக்கம்பி.ஆர்.ஓ.
உருவாக்கம்7 மே 1960
சட்ட நிலைசெயல்பாட்டில்
நோக்கம்எல்லைப்பகுதி சாலைக் கட்டுமானம்
தலைமையகம்புது தில்லி
தலைமையகம்
  • இந்திய எல்லைப்பகுதிகள்
சேவை பகுதி
இந்தியா
தலைமை இயக்குர்
எஸ். ரவி சங்கர்(2011)
தாய் அமைப்பு
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்
வரவு செலவு திட்டம்
4,000crore
(US$723 million)
(2011)[சான்று தேவை]
வலைத்தளம்www.bro.nic.in

எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) இந்திய எல்லைப்புறச் சாலைகளைப் பராமரிக்கும் அமைப்பாகும். பொது சேம பொறியாளர் படையிலிருந்து எல்லைப்புறச் சாலைகள் பொறியியல் பணி அதிகாரிகளும், இந்தியத் தரைப்படையிலிருந்து தரைப்படை பொறியாளர்களும் சேர்ந்து இவ்வமைப்பு செயல்படுகிறது. இந்திய எல்லைகளில் உள்ள சாலைகளைப் பாதுகாக்கவும், எல்லைப்புற சுரங்கப்பாதைகளை அமைக்கவும் இவ்வமைப்பு பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரப் பின்னடைவுள்ள வடக்கு மற்றும் வடகிழக்கு இந்திய எல்லைப் பகுதிகளில் சாலை வசதி அமைக்கிறது. இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கும் வகையில் சாலைகளை அமைக்கிறது. இமயமலை உச்சியிலும், மேற்கு வங்காள சதுப்பு நிலங்களிலும், தார் பாலைவனப் பகுதிகளிலும் இதன் பணி குறிப்பிடத்தக்கது.[1] இவ்வமைப்பு உயரமான இடத்திலும், சுமார் 5,608 மீட்டர்கள் (18,399 ft) உயரத்திலும் சாலைகள் அமைத்துப் பராமரிக்கிறது. இவ்வமைப்பு அந்தமான் நிக்கோபார் தீவுகள் உட்பட 22 இந்திய மாநிலங்களில் மொத்தம் 32,885 கிலோமீட்டர்கள் (20,434 mi) நீள சாலைகளையும், 12,200 மீட்டர்கள் (40,026 ft) நீள பாலங்களையும் பராமரித்து வருகிறது

வரலாறு[தொகு]

7 மே 1960ல் எல்லைப்புறச் சாலை மேம்பாட்டு வாரியத்தால் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் மதிப்புக் கொண்ட தலைமை இயக்குநர் பி.ஆர்.ஓ.வினை வழிநடத்துகிறார்.[2][3]

பணிகள்[தொகு]

அமைதிக் காலங்கள்[தொகு]

  • எல்லைப்பகுதிகளில் சாலை உள்கட்டமைப்பை அமைத்து பராமரித்தல்
  • எல்லைப்பகுதி மாநிலங்களுக்கு சமூக-பொருளாதாரப் பங்களிப்பு வழங்குதல்

போர்க் காலங்கள்[தொகு]

  • கட்டுப்பாட்டு எல்லைகளுக்குச் சாலைத்தொடர்புகளை அமைத்து பராமரித்தல்.
  • மத்திய அரசின் கட்டளைப்படிப் போர்க் காலப் பணிபுரிதல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. aurora (2008-05-07). "BRO: Bridging gaps, Connecting lives". Sankalp India Foundation. Bangalore, Karnataka, India: Sankalp India Foundation.
  2. "Border Roads Organisation". GlobalSecurity.org. Alexandria, Virginia: GlobalSecurity.org. 25 September 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "DG's Message". Border Roads Organisation. Border Roads Organisation. 26 மே 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 May 2011 அன்று பார்க்கப்பட்டது.