அலக்நந்தா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலக்நந்தா ஆறு (अलकनंदा)
River
Alaknanda devprayag.jpg
உத்தரகாண்ட், தேவப்பிரயாகையினுள்ளே பாயும் அலக்நாந்தா நதி.
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரகாண்ட்
பகுதி கார்வால் கோட்டம்
மாவட்டங்கள் சமோலி, ருத்ரபிரயாக், பௌரி கர்வால்
கிளையாறுகள்
 - இடம் சரசுவதி, தவுலிகங்கா, நந்தாகினி, பின்டார்
 - வலம் மந்தாகினி
உற்பத்தியாகும் இடம் Confluence of Satopanth Glacier and Bhagirathi Kharak Glacier
 - உயர்வு 3,880 மீ (12,730 அடி)
Source confluence பாகிரதி ஆறு
கழிமுகம் கங்கை ஆறு
 - அமைவிடம் தேவப்பிரயாகை, உத்தரகாண்ட், இந்தியா
 - elevation 475 மீ (1,558 அடி)
நீளம் 190 கிமீ (118 மைல்)
வடிநிலம் 10,882 கிமீ² (4,202 ச.மைல்)
Discharge
 - சராசரி
உத்தரகாண்ட் மாநிலத்தில் கார்வால் கோட்டம் வழியே பாயும் கங்கையின் இமாலய உற்பத்தி ஆறுகள். தேவப்பிரயாகையில் கங்கையின் இடது புறமுள்ள ஒர் துணை ஆறு அலக்நந்தா.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கார்வால் கோட்டம் வழியே பாயும் கங்கையின் இமாலய உற்பத்தி ஆறுகள். தேவப்பிரயாகையில் கங்கையின் இடது புறமுள்ள ஒர் துணை ஆறு அலக்நந்தா.

அலக்நந்தா ஆறு அல்லது அலக்கநந்தா ஆறு இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சிவாலிக் மலையில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும்.

ஆறு[தொகு]

அலக்நந்தா ஆறு இமயமலைத் தொடரில் பனிப்பாறையில் இருந்து உருகி ஆறாக உற்பத்தியாகி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்நதி 196 கிலோமீட்டர் நீளம் கொண்டது .இந்நதி சமோலி மாவட்டம், டெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் பௌரி கர்வால் மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்தோடுகிறது. இந்த ஆறும் பாகீரதி ஆறும் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் இணைகிறது. பின் இங்கிருந்து கங்கை ஆறாக மாறுகிறது. இந்த நதியே கங்கை நதியில் பெரும் பங்களிப்பைத் தருகிறது.

பத்ரிநாத் கோயில்[தொகு]

பத்ரிநாத் கோவில் இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்வியதேசங்களுள் ஒன்றாகும். இது அலக்நந்தா ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. இந்த இடமானது இமய மலைத்தொடரில் நாரயன் மற்றும் நார் என்ற இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது.நீல்கந்த் சிகரம் நாரயன் மலைத்தொடரின் பின்புறம் அமைந்துள்ளது. இந்த கோயிலைக் காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து பெருமாளைத் தரிசிக்கின்றனர். . இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.

துணை ஆறுகள்[தொகு]

மந்தாகினி, நந்தாகினி, பிந்தார் ஆகியன இதன் துணையாறுகள்.

ஐந்து ஆறுகளின் கூடுதுறை[தொகு]

இந்த ஆற்றில் தளௌலி கங்கை ஆறு, அலக்நந்தா ஆறு, பிந்தர் ஆறு, மந்தாகினி ஆறு மற்றும் பகீரதி ஆறு என்னும் ஐந்து கிளை ஆறுகள் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் பகுதியில் ஒன்றாக கலக்கின்றன. எனவே இந்த இடம் புனித நதிகளின் சங்கமம் எனும் பொருளில் ப்ஞ்ச பிரயாகை எனறு அழைக்கப்படுகிறது. ஆறுகள் சங்கமிக்கும் இடங்களில் பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

படகுப் பயணம் செய்தல்[தொகு]

இந்த ஆற்றில் ரப்பர் படகுகளைக் கொண்டு படகுப் பயணம் செய்தல் என்பது ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகும்.இங்கு வரும் சுற்றுலப்பயணிகள் இதை பெரிதும் விரும்புவர். மேலும் பல்வேறு வகையான சுற்றுலாத் தலங்கள் காணாப்படுகின்றன. எனவே இந்த ஆறு உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை வெகுவும் கவர்கிறது.

அணைகள்[தொகு]

இவ்வாற்றின் குறுக்கே 37 அணைகள் (கட்டிமுடிக்கப்பட்டோ கட்டப்பட்டோ அல்லது திட்டமிடப்பட்டோ) நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக உள்ளன. அவைகள்

# அணைகளின் பெயர்கள் மெகா வாட் நிலை அணையின் உயரம்
1 பத்ரிநாத் 1.25 செயல்பாட்டில் உள்ளது
2 டாபொவான் 0.8 செயல்பாட்டில் உள்ளது
3 தாராலி 0.4 செயல்பாட்டில் உள்ளது
4 தில்வாரா 0.2 செயல்பாட்டில் உள்ளது
5 உர்கம் 3 செயல்பாட்டில் உள்ளது
6 விஸ்ணுபிரியாஹ் 400 செயல்பாட்டில் உள்ளது 14
7 காளிகங்கா 1 4 கட்டுமானத்தில் உள்ளது
8 காளிகங்கா 2 6 கட்டுமானத்தில் உள்ளது
9 கோட்டி பெல் 1 320 கட்டுமானத்தில் உள்ளது 90
10 கோட்டி பெல் 2 530 கட்டுமானத்தில் உள்ளது 82
11 மாதாமஹேஸ்வர் 50 கட்டுமானத்தில் உள்ளது
12 தபவோவன் விஸ்ணுகுட் 520 கட்டுமானத்தில் உள்ளது 22
13 ஸ்ரீநகர் 330 கட்டுமானத்தில் உள்ளது
14 சிங்கிளி பிஹத்வாரி 99 கட்டுமானத்தில் உள்ளது

நகரங்கள்[தொகு]

இந்த நதிக் கரையில் அமைந்துள்ள நகரங்கள் பத்ரிநாத், விஷ்ணுபிரயாக், ஜோஷிமத், சாமோலி, நந்தப்பிராக், கர்ணபிரயாக், ருத்ரபிரயாக், ஸ்ரீநகர் மற்றும் தேவ்பிரயாக் ஆகிய நகரங்களாகும்.

சந்திக்கும் பிரச்சனைகள்[தொகு]

இந் நதியின் முதன்மைப் பகுதியில் மழைக் காலங்களில் பனிப் பெருகி உருகி அடிக்கடி வெள்ளப்பெருக்கினை ஏற்படும். இதனால் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். எனவே மக்கள் இந்த நதிக்கரையின் ஒரங்களில் குடியிருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2013ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளிலும், நிலச்சரிவுகளிலும் சிக்க பல பேர் மாண்டுள்ளனர். இந்திய வான்படை, இராணுவம், மற்றும் மத்திய பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து 1,00,000 அதிகமானோரை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்டனர்.[1] பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் வழியும் தடை பட்டது. தற்போது நிலைலமை சீராகி விட்டது. இருந்த போதிலும் இமயமலைத் தொடரில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களால் சுற்றுலாப் பயணிகள் இந்த நதியின் போக்கை அறிந்து பயணம் மேற்கொள்ளலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலக்நந்தா_ஆறு&oldid=2997033" இருந்து மீள்விக்கப்பட்டது