உள்ளடக்கத்துக்குச் செல்

கார்வாலின் ராணி கர்ணாவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்வால் இராச்சியத்தின் ராணி கர்ணாவதி (Rani Karnavati of Garhwal), தெஹ்ரி கர்வால் என்றும் அழைக்கப்படுகிறார். ஷா என்ற பட்டத்தைப் பயன்படுத்தும் கார்வாலின் ராஜபுத்ர மன்னர் மஹிபத் ஷா (அல்லது மஹிபதி ஷா) என்பவரின் மனைவியாவார்.

அரியணை

[தொகு]

கார்வால் இராச்சியத்தின் தலைநகரம் தேவல்கரில் இருந்து உத்தராகண்டத்தின் ஸ்ரீநகருக்கு மாற்றப்பட்டது. [1] இவர் 1622இல் அரியணையில் ஏறினார். கர்வாலின் பெரும்பாலான பகுதிகளில் தனது ஆட்சியை மேலும் பலப்படுத்தினார்.

ஆட்சி

[தொகு]

மன்னர் மஹிபதி ஷா 1631இல் இறந்த போது, [2] அவரது மரணத்திற்குப் பிறகு ராணி கர்ணாவதி, சிறுவனான ஏழு வயது மகன் பிருத்விபதி ஷா சார்பாக ராச்சியத்தை ஆட்சி செய்தார். இவர் பின்னர் பல ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது காலத்தில் படையெடுப்பாளர்களுக்கு எதிராக ராச்சியத்தை வெற்றிகரமாக பாதுகாத்தார். குறிப்பாக, 1640இல் நஜாபத் கான் தலைமையிலான ஷாஜகானின் முகலாய இராணுவத்தின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தார். அந்த நேரத்தில் அவர் 'நக்தி ராணி' (நக்-கத்- ராணி) என்ற புனைப்பெயரைப் பெற்றார். அந்தக் காலத்தின் முகலாய படையெடுப்பாளர்கள் செய்த்தைப் போல, தோல்வியுற்றவர்களின் மூக்குகளை வெட்டும் பழக்கம் இவருக்கு இருந்தது. [3]

ஆளுமை

[தொகு]

இவரால் கட்டப்பட்ட நினைவுச்சின்னங்கள் தேராதூன் மாவட்டத்திலுள்ள் நவாடாவில் இன்றும் உள்ளன. [4] ரிஸ்பானா நதியிலிருந்து தொடங்கி தேராதூன் நகரம் வரை அதன் நீரைக் கொண்டுவரும் அனைத்து தூன் கால்வாய்களிலும் முதன்மையான ராஜ்பூர் கால்வாயைக் கட்டிய பெருமையும் இவருக்கு உண்டு . [5] தூன் பள்ளத்தாக்கின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியை வடிகட்டுகின்ற சாங் ஆற்றின் துணை நதியில் ரிஸ்பானா நதியும் ஒன்றாகும்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு இவரது மகன் பிருத்விபதி ஆட்சிப்பொறுப்பை ஏற்று தனது தாயின் ஆலோசைனையின் கீழ் புத்திசாலித்தனமாக ஆட்சி செய்தார்.

குறிப்புகள்

[தொகு]