கோமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோமுகத்தில் உள்ள சிறு கோயில், கங்கோத்ரி கொடுமுடி, உத்தரகாண்ட், இந்தியா
பசுவின் முகவாயில் போன்று அமைந்த கோமுகம் கொடுமுடியும், அங்கிருந்து உற்பத்தியாகும் பாகீராதி ஆறும்

கோமுகம் அல்லது பசுமுகம் (Gomukh), இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரியின் பனி மூடிய கொடுமுடிகளிலிருந்து பாகீரதி ஆற்றின் உற்பத்தியாகும் இடமாகும். பாகீரதி ஆறு, கங்கை ஆற்றின் தாய் ஆறு ஆகும்.

இமயமலையில் அமைந்துள்ள கோமுகம், உத்தரகாசி மாவட்டத்தில் 13,200 அடி (4,023 மீ) உயரத்தில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனிதத் தலமான கங்கோத்ரி கோமுகத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலையேற்ற வீரர்களுக்கு கோமுகம் முக்கியமான இடமாகும். [1][2]

பெயர்க் காரணம்[தொகு]

வட மொழியில் கோ என்பதற்கு பசு என்றும், முக் என்பதற்கு முகம் என்றும் பொருளாகும். இக்கொடுமுடி பசுவின் முகம் போன்று காணப்படுவதால் கோமுகம் என்று பெயராயிற்று.

புவியியல்[தொகு]

கோமுகம், பாகீரதி ஆற்றின் உற்பத்தி இடம்

கோமுகம், கங்கோத்திரியிலிருந்து 18 கிமீ தொலைவிலும், 4255 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. பனிபடர்ந்த கங்கோத்ரி கொடுமுடியின் பசுவின் முகவாயில் போன்று அமைந்த கோமுகத்திலிருந்து, கங்கை ஆற்றின் தாய் ஆறான பாகீரதி ஆறு உற்பத்தி ஆகிறது.

இதனையும் காண்க[தொகு]

நான்கு சிறு கோயில்கள்
Kedarnathji-mandir.JPG Badrinathji temple.JPG
கேதாரிநாத் பத்ரிநாத்
Gangotri temple.jpg Yamunotri temple and ashram.jpg
கங்கோத்ரி யமுனோத்திரி

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோமுகம்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 30°55′36″N 79°04′51″E / 30.92678°N 79.08079°E / 30.92678; 79.08079

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமுகம்&oldid=3102857" இருந்து மீள்விக்கப்பட்டது