தேவபிரயாகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவபிரயாகையில் அலக்நந்தா ஆறு (இடது) மற்றும் பகீரதி ஆறு (வலது) ஒன்று கூடுமிடம்தேவபிரயாகை (Devprayag) (Deva prayāga) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் அமைந்த டெக்ரி கார்வால் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.[1] இமயமலையில் உற்பத்தியாகும் அலக்நந்தா ஆறும், பகீரதி ஆறும் இவ்வூரில் ஒன்றாகக் கூடி, கங்கை ஆறு எனும் பெயர் கொள்கிறது. இது பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். பிரயாகை எனும் சமஸ்கிருத மொழி சொல்லிற்கு ஆறுகள் ஒன்று கூடும் இடம் (கூடுதுறை) எனப்பொருளாகும்.

ரிசிகேசத்திலிருந்து 70 கிமீ தொலைவில், இமயமலையில் 830 மீட்டர் (2,723 அடி ) உயரத்தில் அமைந்த தேவபிரயாகையில் ரகுநாத் கோயில், பைரவர், துர்கை மற்றும் விஷ்வேஷ்வரர் கோயில்களும்; பைத்தல் குண்டம், சூரிய குண்டம், பிரம்ம குண்டம் மற்றும் வசிஷ்ட குண்டம் எனும் நீரூற்றுகளும் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தேவபிரயாகையின் மொத்த மக்கள்தொகை 2144 ஆகும். [2] இதில் ஆண்கள் 52% மற்றும் பெண்கள் 48% உள்ளனர். சராசரி எழுத்தறிவு 77% ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13% ஆக உள்ளனர். தேவபிரயாகை பத்ரிநாத் கோயில் பூசாரிகள் குடியிருப்பாக உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தேவபிரயாகை
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவபிரயாகை&oldid=3048355" இருந்து மீள்விக்கப்பட்டது