நந்தபிரயாகை
நந்தபிரயாகை | |
---|---|
சிற்றூர் | |
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 30°20′N 79°20′E / 30.33°N 79.33°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | சமோலி |
ஏற்றம் | 914 m (2,999 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,641 |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 246449 |
நந்தபிரயாகை (Nandaprayag) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்த சிற்றூர் மற்றும் பேரூராட்சியும் ஆகும். இது பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். நந்தபிரயாகையில் நந்தாகினி ஆறு மற்றும் அலக்நந்தா ஆறுகளும் சங்கமம் ஆகுமிடமாக உள்ளது.[1]
நந்தபிரயாகை 30°20′N 79°20′E / 30.33°N 79.33°E பாகையில் அமைந்துள்ளது. இது இமயமலையில் 914 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. புதுதில்லி-பத்திரிநாத் மற்றும் மணா கணவாயை இணைக்கும் 538 கிமீ நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எண் 58 நந்தபிரயாகை வழியாகச் செல்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 401 வீடுகள் கொண்ட நந்தபிரயாகை பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 1,641 ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 228 ஆகவுள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 852 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.05% ஆகும். மக்கள் தொகையில் 92.14% இந்துக்கள் 92.14%, இசுலாமியர் 6.64% ஆகும்.[2]
நீர் மின் நிலைத் திட்டம்
[தொகு]உத்தராகாண்ட் அரசின் மின்சார வாரியத்தினர் இந்நகரத்தில் பௌலா நந்தபிரயாகை நீர் மின் நிலையத் திட்டம் செயல்படுத்தி, 300 மெகா வாட் (4 x 75 MW) மின்சாரம் உற்பத்தி செய்கிறது. [3]
-
நந்தாகினி ஆறும், அலக்நந்தா ஆறும் கூடுமிடம், நந்தபிரயாகை
-
நநதபிரயாகை அருகே பங்காலி கிராமம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Uttaranchal. Rupa & Co. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-291-0861-5. Page 12
- ↑ Nandprayag Population Census 2011
- ↑ "Welcome to Uttarakhand Jalvidyut Nigam". Archived from the original on 4 August 2018. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- Chamoli district, Official website பரணிடப்பட்டது 2011-07-30 at the வந்தவழி இயந்திரம்