புலி அருவி
தோற்றம்

புலி அருவி (Tiger Falls) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் சக்ராதா நகரத்தின் மலைப் பிரதேச நிலப்பகுதியில் மறைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரம் டேராடூன் நகரிலிருந்து 98 கிலோமீட்டர் தொலைவிலும், சக்ராதா நகரிலிருந்து 20 கிலோமிட்டர் தொலைவிலும் இந்தப் புலி அருவி அமைந்துள்ளது. சக்ராதா நகரிலிருந்து மலைப்பதையில் செல்வதென்றால், கொத்துகொத்தாக மலர்களைக் கொண்ட பசுமைமாறா செடி வகைகள் மற்றும் ஓக் மரங்கள் நிறைந்த சூழலில் 5 கிலோ மீட்டர் தொலைவை மலையேறி கடந்து அருவியை அடையலாம். இது 312 அடி உயரத்திலிருந்து நேராக விழும் ஒரு நீர்வீழ்ச்சி ஆகும். நேரடியாக தரையில் நீர்விழும் அருவிகளில் மிகவும் உயர்ந்த அருவி புலி அருவி எனக் கருதப்படுகிறது[1][2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tiger Falls, Chakrata". eUttaranchal. Retrieved 21 August 2016.
- ↑ "Chakrata". Uttrakhand Tourism. Retrieved 21 August 2016.