மந்தாகினி ஆறு
Jump to navigation
Jump to search
மந்தாகினி ஆறு (Mandakini River) அலக்நந்தா ஆற்றின் துணையாறுகளுள் ஒன்று. இது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் கேதார்நாத்துக்கு அருகில் தோன்றிப் பாய்கிறது. ருத்ரப்பிரயாகை என்னும் இடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் சேர்கிறது. பின்னர் இந்த அலக்நந்தா ஆறு தேவப்பிரயாகை என்னுமிடத்தில் பாகீரதி ஆற்றுடன் சேர்ந்து கங்கையாறாக உருப்பெறுகிறது.
வடமொழியில் மந்தம் என்றால் மெதுவாக என்று பொருள். மெதுவாகச் செல்பவள் என்னும் பொருள்படும்படி இவ் ஆறு மந்தாகினி என்று அழைக்கப்படுகிறது.