பண்டிட் கோவிந்த் பல்லாப் பந்த் உயர் குத்துயர உயிரியல் பூங்கா

ஆள்கூறுகள்: 29°22′52″N 79°28′08″E / 29.381°N 79.469°E / 29.381; 79.469
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டிட் கோவிந்த் பல்லாப் பந்த் உயர் குத்துயர உயிரியல் பூங்கா
Bear in G B Pant High Altitude Zoo,Nainital.jpg
திறக்கப்பட்ட தேதி1 சூன் 1995
இடம்நைனித்தால், உத்தராகண்டம், இந்தியா
அமைவு29°22′52″N 79°28′08″E / 29.381°N 79.469°E / 29.381; 79.469
வருடாந்திர வருனர் எண்ணிக்கைapprox. 125,000 [1]
உறுப்பினர் திட்டம்மத்திய விலங்கு காட்சியக ஆணையம்[2]
இணையத்தளம்www.nainitalzoo.org.in

பண்டிட் கோவிந்த் பல்லாப் பந்த் உயர் குத்துயர உயிரியல் பூங்கா (G. B. Pant High Altitude Zoo, Nainital), உத்தராகண்டம் மாநிலம் நைனித்தாலில் அமைந்துள்ள உயரமான இடத்தில் உள்ள உயிரியல் பூங்கா ஆகும். 1984-ல் நிறுவப்பட்ட இந்த உயிரியல் பூங்கா 1995-ல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. இந்த உயிரியல் பூங்கா கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,100 மீட்டர்கள் (6,900 ft) உயரத்தில் சேர்கா தண்டா மலையில் 4.6 எக்டேர்கள் (11 ஏக்கர்கள்) அமைந்துள்ளது. டார்ஜீலிங் மற்றும் சிக்கிம் தவிர வட இந்தியாவில் உள்ள ஒரே உயரமான உயிரியல் பூங்கா இதுவாகும். பல ஆண்டுகளாக இது ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.[1][3]

வரலாறு[தொகு]

இந்த மிருகக்காட்சிசாலை 1984-ல் நிறுவப்பட்டது. இருப்பினும் இது சூன் 1995 அன்று பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டது. [4]

நைனித்தால் உயிரியல் பூங்காவில் 2001ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2011-ல் இறக்கும் வரை இந்தியாவின் ஒரே சைபீரியப் புலி இருந்தது. குணால் என்று பெயரிடப்பட்ட இந்தப் புலி, 1997-ல் டார்ஜீலிங்கிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு இணை புலிகளில் ஒன்றாகும். இன்னொரு புலி மகேசு ஆகும்.[5] இந்தப் புலி 2001-ல் இறந்தது.

கண்ணோட்டம்[தொகு]

இந்த மிருகக்காட்சிசாலையில் இமயமலையில் அழிந்து வரும் பல விலங்குகள் உள்ளன. இங்கு வங்காளப் புலி, இமாலய ஓநாய், கடமான், சிறுத்தைப் பூனை மற்றும் இமயமலை கருப்புக் கரடி போன்ற விலங்குகள் உள்ளன. இது கலிஜ் பகட்டு வண்ணக்கோழி, லேடி ஆம்ஹெர்ஸ்ட் பகட்டு வண்ணக்கோழி, பச்சைக்கிளி, பொன்னிற பெருஞ்செம்போத்து மற்றும் சிவப்புக் காட்டுக்கோழி போன்ற உயரமான இடங்களில் வாழக்கூடிய பறவைகளும் காணப்படுகின்றன.

மிருகக்காட்சிசாலையில் விலங்குகளுக்கான இரவு தங்குமிடங்கள் உள்ளன. மேலும் குளிர்கால மாதங்களில் பறவை அடைப்புகளில் குளிரின் பாதிப்பினைக் குறைப்பதற்காகத் திரைச்சீலைகள் போடப்படுகின்றன.[6]

நிலவியல்[தொகு]

இந்த உயிரியல் பூங்கா கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,100 முதல் 2,150 மீட்டர்கள் (6,890 முதல் 7,050 ft) வரை) உயரத்தில் அமைந்துள்ளது. சிவாலிக் மற்றும் மத்திய இமயமலை மலைத்தொடருக்கு இடையே இது அமைந்துள்ளது. பசுமையான கருவாலி மரம், குபிரசஸ் மற்றும் இரண்டு கருவாலி சிற்றின மரங்களும் இங்குக் காணப்படுகின்றன.

போக்குவரத்து[தொகு]

நைனிடாலில் உள்ள டாலிட்டால் பேருந்து நிலையத்திலிருந்து உயிரியல் பூங்கா சுமார் 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) ) தொலைவில் அமைந்துள்ளது. மிருகக்காட்சிசாலைக்கு செல்லும் செங்குத்தான சாலையில் வாகனத்தில் பயணிக்கலாம். இருப்பினும் பல சுற்றுலாப் பயணிகள் மலையில் நடந்து செல்கின்றனர்.

மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் நேரம்: வெள்ளி முதல் புதன் வரை: காலை 10.00 - மாலை 4.30

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Nainital' Pt. G. B. Pant High altitude Zoo is a big tourist attraction". Newstrack. 4 December 2008. http://www.newstrackindia.com/newsdetails/45613. 
  2. "Search Establishment". cza.nic.in. CZA. 21 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. Official web site
  4. Introduction பரணிடப்பட்டது 8 மார்ச் 2012 at the வந்தவழி இயந்திரம் Official website.
  5. "Lone Siberian tiger dies in Nainital Zoo". The Pioneer (Delhi). 21 November 2011. http://dailypioneer.com/nation/22034-lone-siberian-tiger-dies-in-nainital-zoo.html. பார்த்த நாள்: 25 December 2011. 
  6. "Kumaon Briefs: Honey, eggs for park animals". The Tribune. 3 January 2012. http://www.tribuneindia.com/2012/20120103/region.htm.