ஆற்றுச்சந்தி
Appearance
புவியியலில் இரண்டு அல்லது பல ஆறுகள் (ஆறும் துணை ஆறும்) ஒன்றோடொன்று கலக்கும் இடம் ஆற்றுச்சந்தி ஆகும் (ஆங்கிலம்: confluence). அதனை ஆற்றுச்சங்கமம் என்றும் கூறலாம்.
பவானி ஆறு காவிரியில் இணையும் சந்தியில் பவானி நகரம் அமைந்துள்ளது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடுகின்ற இடம் திரிவேணி சங்கமம். இவ்விடம் அலகாபாத் நகரில் உள்ளது.