உள்ளடக்கத்துக்குச் செல்

ப. சிதம்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப. சிதம்பரம்
2008 இல் தில்லி-இல் நடந்த உலகப் பொருளாதார சந்தையின் குழுகூட்டத்தின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
5 சூலை 2016 – 10 டிசம்பர் 2021
தொகுதிமகாராட்டிரம்
இந்திய நிதியமைச்சர்
பதவியில்
31 சூலை 2012 – 26 மே 2014
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்பிரணப் முகர்ஜி
பின்னவர்அருண் ஜெட்லி
பதவியில்
22 மே 2004 – 30 நவம்பர் 2008
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்ஜஸ்வந்த் சிங்
பின்னவர்பிரணப் முகர்ஜி
பதவியில்
1 மே 1997 – 19 மார்ச் 1998
பிரதமர்ஐ. கே. குஜரால்
முன்னையவர்ஐ. கே. குஜரால்
பின்னவர்யஷ்வந்த் சின்கா
பதவியில்
1 சூன் 1996 – 21 ஏப்ரல் 1997
பிரதமர்தேவ கௌடா
முன்னையவர்ஜஸ்வந்த் சிங்
பின்னவர்ஐ. கே. குஜரால்
இந்திய உள்துறை அமைச்சர்
பதவியில்
29 நவம்பர் 2008 – 31 சூலை 2012
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்சிவ்ராஜ் பாட்டீல்
பின்னவர்சுசில்குமார் சிண்டே
பணியாளர்கள், பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் துறை அமைச்சர்
பதவியில்
30 நவம்பர் 2009 – 31 சூலை 2012
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்சிவ்ராஜ் பாட்டீல்
பின்னவர்சுசில்குமார் சிண்டே
பதவியில்
26 திசம்பர் 1985 – 2 திசம்பர் 1989
பிரதமர்ராஜீவ் காந்தி
முன்னையவர்காமாக்யா பிரசாத் சிங் தியோ
பின்னவர்மார்கரட் அல்வா
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
1984–1999
முன்னையவர்ஆர். சாமிநாதன்
பின்னவர்மா. சுதர்சன நாச்சியப்பன்
பதவியில்
2004–2014
முன்னையவர்மா. சுதர்சன நாச்சியப்பன்
பின்னவர்பி. ஆர். செந்தில்நாதன்
தொகுதிசிவகங்கை, தமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 செப்டம்பர் 1945 (1945-09-16) (அகவை 78)
கண்டனூர், பிரித்தானிய இராச்சியம்
(தற்போது தமிழ்நாடு, இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1972–1996), (2004–தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ் மாநில காங்கிரசு (1996–2001)
காங்கிரசு சனநாயகப் பேரவை (2001–2004)
துணைவர்நளினி சிதம்பரம்
பிள்ளைகள்கார்த்தி சிதம்பரம் (மகன்)
முன்னாள் கல்லூரிமாநிலக் கல்லூரி, சென்னை
சென்னை சட்டக்கல்லூரி
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

பழநியப்பன் சிதம்பரம் (P. Chidambaram, பிறப்பு: செப்டம்பர் 16, 1945) தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சரும் ஆவார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் இந்தியாவின், தமிழ்நாடு, மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், கண்டனூர் கிராமத்தில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தில் பழனியப்பசெட்டியார், லட்சுமி தம்பதிக்கு செப்டம்பர் 16, 1945 ஆம் நாள் மகனாகப் பிறந்தார். ப. அண்ணாமலை, ப. லட்சுமணன் என்னும் இரு அண்ணன்களும் உமா என்னும் தங்கையும் இவருடன் பிறந்தவர்கள் ஆவர்.[2],[3] வழக்கறிஞராகப் பயிற்சிபெற்ற பொழுது உடன்பயிற்சி பெற்ற நளினி என்பவரைக் காதலித்தார். ஆனால், அக்காதலை சாதிவேறுபாட்டின் காரணமாக இவர் தந்தை பழனியப்பன் ஏற்க மறுத்தார். எனவே, நீதிபதி பி. எஸ். கைலாசம், சௌந்தரா கைலாசம் ஆகியோருக்கு மகளான, நளினியை 1968 திசம்பர் 11ஆம் நாள் [4] பதிவுத்திருமணம் செய்துகொண்டார்; பின்னர் அவர் நண்பர்கள் சாந்தகுமார், சுதர்சனம் ஆகியோரின் முன்முயற்சியால் பெரியார் ஈ.வெ.ராமசாமி தலைமையில் பெரியார் திடலில் அவர்களது திருமணம் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு கார்த்தி என்ற மகன் உள்ளார்.[5]

கல்வி

[தொகு]

தொழில்

[தொகு]

ப.சிதம்பரம் 1967ஆம் ஆண்டில் சுதேசமித்திரன் நாளிதழில் சிறிதுகாலம் பணியாற்றினார்.[5]. சட்டம் பயின்ற இவர், மூத்த வழக்கறிஞர் நம்பியார் என்பவரிடம் இளம்வழக்கறிஞராகச் சேர்ந்து பயிற்சிபெற்றார். பி. எஸ். கைலாசம், கே. கே. வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து சிறிதுகாலம் தொழில்புரிந்தார்.[5] பின்னர் தனித்துத் தொழில்புரிந்து 1984ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞரானார்.[7]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இந்திய தேசிய காங்கிரசில்

[தொகு]

இவர், 1972ஆம் ஆண்டில் இந்திராகாந்தியின் தலைமையிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சி. சுப்பிரமணியத்தின் பரிந்துரையால் உறுப்பினர் ஆனார்.[5] 1973ஆம் ஆண்டில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5] 1976ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பை வகித்தார்.[4] அப்பொழுது பொதுவுடைமைக்கட்சியைச் சேர்ந்த மைதிலி சிவராமன், பின்னாளில் இந்து இதழின் ஆசிரியாராகப் பொறுப்பேற்ற என். ராம் ஆகியோடு இணைந்து ரேடிக்கல் ரிவ்யூ (Radical Review) என்னும் இதழை வெளியிட்டு வந்தனர்.[5]

1976ஆம் ஆண்டில் காமராசர் மறைவிற்குப் பின்னர் சிண்டிகேட் காங்கிரசு என்னும் நிறுவன காங்கிரசு இந்திராகாந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசோடு இணைந்தபொழுது, சி. சுப்பிரமணியன் பரிந்துரையால், அந்நாளைய தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர் கோ. கருப்பையா மூப்பனாரால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு .[5] 1976-77ஆம் ஆண்டில் அப்பதவியினை வகித்தார்.[4] நெருக்கடிநிலைக் காலத்தில் 1976ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் இராஜசிங்கமங்களத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திராகாந்தியின் சொற்பொழிவை மொழிபெயர்த்து அவரின் அறிமுகத்தைப் பெற்றார்.[5]

1985 ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் (இந்திரா) இணைச் செயலாளர் ஆனார்.

தமிழ் மாநில காங்கிரசு

[தொகு]

1996 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க முடிவுசெய்தார். ஆனால் காங்கிரசின் தமிழ்நாட்டு உறுப்பினர்களும் தலைவர்களில் பெரும்பாலானோரும் இதனை எதிர்த்தனர். அவர்கள் கோ. கருப்பையா மூப்பனார் தலைமையில் பிரிந்துசென்று தமிழ் மாநில காங்கிரசு என்ற புதியகட்சியை 1996 மார்ச் 29ஆம் நாள் தொடங்கினர். அக்கட்சியின் நிறுவுநர்களில் ஒருவராகப் ப.சிதம்பரம் விளங்கினார்.

காங்கிரசு சனநாயகப் பேரவைத் தொடக்கம்

[தொகு]

2001 ஆம் ஆண்டில் தமிழ்மாநில காங்கிரசு கட்சி, அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபொழுது அதனை எதிர்த்த ப.சிதம்பரம் காங்கிரசு சனநாயகப் பேரவை என்ற கட்சியை உருவாக்கி அதன் பொதுச்செயலாளர் ஆனார்.

மீண்டும் இந்திய தேசிய காங்கிரசில்

[தொகு]

2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரசு சனநாயகப் பேரவையின் சார்பில் இந்திய தேசிய காங்கிரசின் சின்னத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, அமைச்சரானார் ப. சிதம்பரம். அதனைத் தொடர்ந்து 2004 சூன் 5ஆம் நாள் நடைபெற்ற காங்கிரசு சனநாயகப் பேரவையின் பொதுக்குழு, செயற்குழு ஆகியவற்றின் முடிவின்படி[8] அக்கட்சி 2004 நவம்பர் 25ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசோடு இணைந்தது.[9]

தேர்தலில் போட்டி

[தொகு]

ப. சிதம்பரம் 1977ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட சி. சுப்பிரமணியம் பரிந்துரைத்தார்; ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை.[5] மாறாக, 1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடித் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதில் தோல்வியடைந்தார். இவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது அந்த ஒரு முறைதான்.[10]

ஆண்டு கட்சியின் பெயர் தொகுதியின் பெயர் சட்டமன்றம்/ நாடாளுமன்றம் பெற்ற வாக்குகள் முடிவு
1977 காங்கிரசு காரைக்குடி சட்டமன்றம் 27163 [11] தோல்வி
1984 இந்திய தேசிய காங்கிரசு சிவகங்கை மக்களவை ? வெற்றி
1989 இந்திய தேசிய காங்கிரசு சிவகங்கை மக்களவை ? வெற்றி
1991 இந்திய தேசிய காங்கிரசு சிவகங்கை மக்களவை ? வெற்றி
1996 தமிழ் மாநில காங்கிரசு சிவகங்கை மக்களவை ? வெற்றி
1999 தமிழ் மாநில காங்கிரசு சிவகங்கை மக்களவை 1,27,528[12] தோல்வி
2004 இந்திய தேசிய காங்கிரசு சிவகங்கை மக்களவை ? வெற்றி
2009 இந்திய தேசிய காங்கிரசு சிவகங்கை மக்களவை ? வெற்றி
2016 சூலை 05[13] இந்திய தேசிய காங்கிரசு மகாராட்டிரம் மாநிலங்களவை

அமைச்சர்

[தொகு]
 1. 1985 செப்டம்பர் 21ஆம் நாள் வணிக அமைச்சகத்தில் ஒன்றியத் துணை அமைச்சராக (Union Deputy Minister) நியமிக்கப்பட்டார்.[4]
 2. 1985 திசம்பர் 26 ஆம் நாள் முதல் 1989 திசம்பர் 02ஆம் நாள் வரை பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகத்தில் ஒன்றிய அரசு அமைச்சராகவும் (Union Minister of State) [14] 1986 முதல் 1989 வரை உள்விவகார அமைச்சரவையில் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான ஒன்றிய அரசு அமைச்சராகவும் பதவிவகித்தார்.[4]
 3. 1991 சூன் 21 ஆம் நாள் வணிக அமைச்சகத்தில் தனிப்பொறுப்புடைய ஒன்றிய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4] 1991 செப்டம்பரில் இவரும் இவர் மனைவி நளினியும் FFSL(Fair Growth Financial Services Limited) நிறுவனத்தின் 15000 பங்குகளை 1.5. இலட்சம் பங்குகளை வாங்கினர். இந்நிறுவனம் ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழலில் தொடர்புகொண்டிருந்ததால் 1992 சூலை 5 ஆம் நாள் தனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.[15]
 4. 1995ஆம் ஆண்டில் மீண்டும் வணிக அமைச்சகத்தில் தனிப்பொறுப்புடைய ஒன்றிய அமைச்சராக நியமிக்கப்பட்டு 1996 மே 16ஆம் நாள வரை அப்பதவியை வகித்தார்.
 5. 1996 சூன் 1ஆம் நாள் முதல் 21 April 1997 ஏப்ரல் 21 ஆம் வரை ஒரு முறையும்1997 மே 1 முதல் 1998 மார்ச் 19ஆம் நாள் வரை மறுமுறையும் இந்திய ஒன்றிய நிதி அமைச்சராகப் பதவிவகித்தார். 1996 சூன் முதல் சட்டம், நீதி மற்றும் கம்பெனி விவாகரங்கள் அமைச்சரவைக் கூடுதலாகக் கவனித்தார்.[4]
 6. 2004 மே 22ஆம் நாள் முதல் 2008 நவம்பர் 30 ஆம் நாள் வரை இந்திய ஒன்றிய நிதி அமைச்சராக்கப் பதவிவகித்தார்.[4]
 7. 2008 திசம்பர் 1ஆம் நாள் முதல் 2012 சூலை 31ஆம் நாள் வரை இந்திய ஒன்றிய உள்விவகார அமைச்சராகப் பதவிவகித்தார்.[4]
 8. 2012 சூலை 31ஆம் நாள் முதல் 2014 மே 26ஆம் நாள வரை இந்திய ஒன்றிய நிதி அமைச்சராக்கப் பதவிவகித்தார்.[4]

இவர் மத்திய நிதி அமைச்சராக இதுவரை 8 பட்ஜெட்களையும்,1 இடைக்கால பட்ஜெட்டையும் சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாய்க்கு அடுத்து அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.[16] 1997–98ஆம் ஆண்டு இவர் தாக்கல் செய்த பட்ஜெட், கனவு பட்ஜெட் என்று பத்திரிக்கைளால் போற்றப்பட்டது.[17]

கைது

[தொகு]

ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் அந்நிய முதலீட்டை முறைகேடாகப் பெறுவதற்காக ப. சிதம்பரம் உதவினார் என்னும் குற்றச்சாட்டில் 21 ஆகஸ்ட் 2019 அன்று இரவு சிபிஐ மற்றும் அமலாக்கதுறையினர் இவரைக் கைது செய்தனர்.[18]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Piyush Goyal, Chidambaram, Suresh Prabhu, Sharad Yadav elected to Rajya Sabha – The Economic Times. Economictimes.indiatimes.com (3 June 2016). Retrieved on 2016-08-18.
 2. P Chidambaram Biography
 3. மத்திய அமைச்சர் சிதம்பரம் தாயார் மரணம், தினமலர், 2013 சூன் 07
 4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 P. Chidambaram, Member Of Parliament, (RAJYA SABHA)
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 ராதாகிருஷ்ண கே.எஸ்.; சிதம்பரம்: 'வச்சி செய்த' வரலாறு; மின்னம்பலம்; 23 ஆக 2019
 6. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்112
 7. கெளதமன்; யார் இந்த சிதம்பரம்..! இவர் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்..!; குட் ரிடர்ன்ஸ் - இணைய இதழ்; 21-08-2019
 8. [ https://tamil.oneindia.com/news/2004/06/05/congress.html ஒன் இந்தியா - இணைய இதழ், 2004 சூன் 5]
 9. CJP merges with Congress, The Hindu, November 26, 2004
 10. தோற்றவர்கள் வென்ற கதை, கட்டுரை, மு. இராமனாதன், 2021 மார்ச் 28, இந்து தமிழ்
 11. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1977 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU; Election Commission of India, New Delhi, Page 209
 12. STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1999 TO THE THIRTEENTH LOK SABHA, Volume 1, Page.228
 13. P. Chidambaram, Member Of Parliament, (RAJYA SABHA)
 14. Ministry of Personnel, Public Grievances and Pension website
 15. சூனியர் விகடன் 15.7.92 & 22.7.92 &
 16. "chidambaram record budget". http://businesstoday.intoday.in/story/national-budget-chidambaram-is-second-only-to-morarji-desai/1/203266.html. 
 17. "Tenth year after that 'dream budget'". http://economictimes.indiatimes.com/articleshow/1525524.cms. 
 18. "சிதம்பரம் கைது : அடுத்த நடவடிக்கை என்ன?". தினமலர் (ஆகத்து 22, 2019)

வெளி இணைப்புகள்

[தொகு]
இந்திய மக்களவை
முன்னர் சிவகங்கை மக்களவைத் தொகுதி
1984–1999
பின்னர்
முன்னர் சிவகங்கை மக்களவைத் தொகுதி
2004–2009
பின்னர்
அரசியல் பதவிகள்
முன்னர்
காமாகிய பிரசாத் சிங் தியோ
பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய துறை
1985–1989
பின்னர்
முன்னர் இந்தியாவின் நிதியமைச்சர்
1996–1997
பின்னர்
முன்னர் இந்தியாவின் நிதியமைச்சர்
1997–1998
பின்னர்
முன்னர் இந்தியாவின் நிதியமைச்சர்
2004–2008
பின்னர்
முன்னர் இந்தியாவின் உள்துறை அமைச்சர்
2008–2012
பின்னர்
முன்னர் இந்தியாவின் நிதியமைச்சர்
2012–2014
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._சிதம்பரம்&oldid=3962399" இலிருந்து மீள்விக்கப்பட்டது