யஷ்வந்த் சின்கா
யஷ்வந்த் சின்கா | |
---|---|
![]() | |
இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் | |
பதவியில் 2002–2004 | |
முன்னவர் | ஜஸ்வந்த் சிங் |
பின்வந்தவர் | நட்வர் சிங் |
இந்தியாவின் நிதியமைச்சர் | |
பதவியில் 1998–2002 | |
முன்னவர் | ப. சிதம்பரம் |
பின்வந்தவர் | ஜஸ்வந்த் சிங் |
இந்தியாவின் நிதியமைச்சர் | |
பதவியில் 1990–1991 | |
முன்னவர் | மது தண்டவதே |
பின்வந்தவர் | மன்மோகன் சிங் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | செப்டம்பர் 6, 1937 பாட்னா, பீகார் |
அரசியல் கட்சி | பாரதீய ஜனதா கட்சி |
பிள்ளைகள் | ஜெயந்த் சின்ஹா |
சமயம் | இந்து |
யஷ்வந்த் சின்கா (Yashwant Sinha) (பிறப்பு: நவம்பர் 6, 1937, பாட்னா[1]) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் இந்திய நிதியமைச்சராக 1990 முதல் 1991 வரை பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையிலும், மார்ச் 1998 முதல் சூலை 2002 வரை பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் பொறுப்பு வகித்தவர்.[2] மேலும் வெளியுறவு அமைச்சர் ஆக (சூலை 2002 - மே 2004)[3] அடல் பிகாரி வாஜ்பாய் இன் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தார். தற்பொழுது பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கின்றார்.[4] இவரது மகன் ஜெயந்த் சின்ஹா 16 மற்றும் 17வது மக்களவை உறுப்பினர் ஆவார். ஓற்றுமித்த எதிர்க்கட்சிளின் சார்பில் 2022 குடியரசு தலைவர் தேர்தலில் நிறுத்தப்பட்டார்.
இந்திய ஆட்சிப் பணி[தொகு]
இவர் இந்திய ஆட்சிப் பணியில் 1960 முதல் 1984 வரை இருந்து விருப்பஓய்வு பெற்று அரசியலுக்கு வந்தார்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்[தொகு]
இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக 1989 மற்றும் 2004 ல் இருமுறையும், மக்களவை உறுப்பினராக சார்க்கண்ட் மாநிலம் ஹஜாரியாபாக் மக்களவைத் தொகுதியிலிருந்து 1998,1999 மற்றும் 2009 ல் மூன்று முறையும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "யஷ்வந்த் சின்கா, a profile:நிதியமைச்சர், இந்திய அரசு". 2007-09-30 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|name=
ignored (உதவி) - ↑ "யஷ்வந்த் சின்கா நிதியமைச்சரானார், அத்வனி உள்துறை அமைச்சரானார் (இந்தியன் எக்ஸ்பிரஸ்)". 2007-09-30 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "BBC News South Asia, Indian government reshuffled". 2007-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Detailed Profile: Shri Yashwant Sinha". Government: of India. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
- இந்திய அரசியல்வாதிகள்
- இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்
- 1937 பிறப்புகள்
- இந்திய நிதியமைச்சர்கள்
- வாழும் நபர்கள்
- 12வது மக்களவை உறுப்பினர்கள்
- 13வது மக்களவை உறுப்பினர்கள்
- 15வது மக்களவை உறுப்பினர்கள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்