ஜஸ்வந்த் சிங்
ஜஸ்வந்த் சிங் | |
---|---|
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2009–பதவியில் | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | Dawa Narbula |
தொகுதி | டார்ஜீலிங் |
இந்திய நிதியமைச்சர் | |
பதவியில் 2002–2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | யஷ்வந்த் சின்கா |
பின்னவர் | ப. சிதம்பரம் |
இந்திய இராணுவ அமைச்சர் | |
பதவியில் 2000–2001 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | ஜார்ஜ் பெர்னாண்டஸ் |
பின்னவர் | ஜார்ஜ் பெர்னாண்டஸ் |
இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் | |
பதவியில் 1998–2004 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | அடல் பிகாரி வாச்பாய் |
பின்னவர் | யஷ்வந்த் சின்கா |
இந்தியாவின் நிதியமைச்சர் | |
பதவியில் 1996–1996 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | மன்மோகன் சிங் |
பின்னவர் | ப. சிதம்பரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சனவரி 3, 1938 இராஜபுதனம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 27 செப்டம்பர் 2020 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
முன்னாள் கல்லூரி | Mayo College இந்திய இராணுவ அகாதமி |
இணையத்தளம் | http://www.jaswantsingh.com |
ஜஸ்வந்த் சிங் (Jaswant Singh) (பிறப்பு: ஜனவரி 3 1938) (இறப்பு செப்டம்பர் 27, 2020)இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான இவர் டார்ஜிலிங் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் மயோ கல்லூரி பழைய மாணவன் மற்றும் கதக்வாலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு பயிற்சி பள்ளியில் கல்வி பயின்றவர். இந்திய இராணுவத்தில் அலுவலராக 1960 களில் பணியாற்றியவர். பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன் குறைந்த கால ஆட்சி காலமான மே 16, 1996 முதல் ஜூன் 1, 1996 வரையுள்ள இடைப்பட்ட காலத்தில், அவரது அமைச்சரவையில் ஆய அமைச்சராக இந்திய நிதியமைச்சர் பொறுப்பிலும், அதன் பின் அமைந்த வாஜ்பாயின் அமைச்சரவையில் இரண்டு வருடங்களுக்குப்பின் வெளியுறவுத்துறை அமைச்சராக டிசம்பர் 5, 1998 முதல் ஜூலை 1, 2002 வரையுள்ள காலத்தில் பொறுப்பிலுருந்தார். 2002 க்கு பிறகு மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்று அக்கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு பதவியிறங்கும் காலமான 2004 வரை பொறுப்பிலிருந்தார். இவருடைய சாத்வீகமான அரசியல் போக்கு அனைவரையும் கவர்ந்ததாகும். பாரதீய ஜனதா கட்சி பெரும்பாலும் வலதுசாரி தேசியவாதிகள் அமைப்பு என்று வர்ணிக்கப்பட்டாலும் இவர் அவைகளிலிருந்து மாறுபட்டு சுதந்திரமான மக்களாட்சியை (ஜனநாயகத்தை) வலியுறுத்துபவராக விளங்கியதின் விளைவாக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதினை 2001 இல் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- Jaswant Singh -Political Profile பரணிடப்பட்டது 2012-03-13 at the வந்தவழி இயந்திரம்
- Jaswant returns to BJP பரணிடப்பட்டது 2010-06-27 at the வந்தவழி இயந்திரம்
- "Jaswant Singh's Website" பரணிடப்பட்டது 2011-10-08 at the வந்தவழி இயந்திரம்
- Jaswant Singh expelled over Jinnah remarks பரணிடப்பட்டது 2009-08-21 at the வந்தவழி இயந்திரம்
- Nehru not Jinnah’s polity led to partition பரணிடப்பட்டது 2009-08-22 at the வந்தவழி இயந்திரம்
- Personal Website
- Modi govt bans book, says it’s a bid to tarnish Sardar image
- Book ban: timing calculated, says Congress
- "In Service of Emergent India" பரணிடப்பட்டது 2009-03-23 at the வந்தவழி இயந்திரம்
- "Jinnah book sales soar after author Jaswant's expulsion"
- "Against Nuclear Apartheid"
- "Jaswant Singh Darjeeling LS Candidate" பரணிடப்பட்டது 2009-08-25 at the வந்தவழி இயந்திரம்
- Financialexpress.com
- Video: Jaswant Singh discusses his book 'Jinnah: India-Partition-Independence' at the Asia Society, New York, Mar. 25, 2010
- Jaswant Singh's monthly syndicated commentary series, "The New Power Game", from Project Syndicate
- இந்திய அரசியல்வாதிகள்
- 1938 பிறப்புகள்
- இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்
- இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்
- 11வது மக்களவை உறுப்பினர்கள்
- 15வது மக்களவை உறுப்பினர்கள்
- 9வது மக்களவை உறுப்பினர்கள்
- பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
- இந்திய நிதியமைச்சர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 10வது மக்களவை உறுப்பினர்கள்
- ஜோத்பூர் மாவட்ட நபர்கள்
- 2020 இறப்புகள்
- இராசத்தானைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்