இந்தியாவின் உள்துறை அமைச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உள்துறை அமைச்சர் -(உள்விவகார அமைச்சர்) இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தின்ஆய அமைச்சராவார். பிரதமருக்கு அடுத்த நிலையில் அதிக முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் வாய்ந்த அமைச்சர் பொறுப்பாகும். மாநில அளவிலும் இவ்வமைச்சகங்கள் பொறுப்பு வாயந்தனவாக கருதப்படுகின்றன. உள்நாட்டு பாதுகாப்புக்கு இவ்வமைச்சகங்களே பொறுப்பு ஏற்கின்றன.

அமைச்சர்கள்[தொகு]

முன்னால் மற்றும் இந்நாள் அமைச்சர்கள்

பணி[தொகு]

உள்துறை அமைச்சரின் முக்கிய பொறுப்புகளாவன;

  • மாநில மற்றும் மத்திய அரசின் உள்நிர்வாகம் சார்ந்த விவகாரங்களை கவனித்தல்.
  • அனைத்து உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களை கவனித்தல்.
  • நாட்டின் அனைத்து சட்ட ஒழுங்கு நிலைமைகளை கண்காணித்தல்.
  • அனைத்து குடியுரிமை மற்றும் இயற்கை பண்புகளை கொண்ட மக்கள்தொகை கணக்கெடுத்தல், தேசிய கீதம், தேசியக் கொடி, மொழிகள் இவைகளை காத்தல்.
  • அரசியலமைப்பின் படி இதன் அடிப்படை செயல்பாடுகளான குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மற்றும் ஏனைய அமைச்சர்களின் சுற்றறிக்கைகள், நியமனங்கள், பொறுப்பு விலகல்கள் அல்லது விலக்கல்கள், ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்களின் நியமனம் மற்றும் விலக்கல்கள் போன்ற செயல்பாடுகள் இத்துறை அமைச்சரால் அல்லது அமைச்சகத்தால் கவனிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]