உள்ளடக்கத்துக்குச் செல்

மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின் ஆற்றல் அமைச்சகம்
विद्युत मंत्रालय
துறை மேலோட்டம்
அமைப்புசூலை 2, 1992 (1992-07-02)
ஆட்சி எல்லைஇந்தியாஇந்தியக் குடியரசு
தலைமையகம்மின் ஆற்றல் அமைச்சகம்
சராம் சக்தி பவன்
ரபி மார்க்
புது தில்லி
பொறுப்பான அமைச்சர்கள்
வலைத்தளம்[1]

மின் ஆற்றல் அமைச்சகம் (Ministry of Power ,India) இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் மின்னாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு, மேலும் மின்செலுத்தம் மின்பகிர்வு, மின்பேணுதல் போன்றவற்றை மேற்பார்வையிடுதலுக்குப் பொறுப்பு வகிக்கின்றது. இந்த அமைச்சகமே ஒன்றிய அரசு, மாநில அரசு, தனியார் மின்னாக்கம் சார்ந்த வேலைகளை ஒருங்கிணைக்கிறது.இதன் மூத்த அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் இணை அமைச்சர் கிருஷண் பால் ஆவர்.

1992 ஜூலை 2 இல், மின்ஆற்றல் அமைச்சகம் தனியே ஏற்படுத்தப்பட்டது.[1] அதற்கு முந்தையக் காலகட்டத்தில் மின்துறை மின் ஆற்றல், நிலக்கரி மற்றும் மரபுசாரா ஆற்றல் அமைச்சகத்தின் ஒரு பிரிவாக இருந்து வந்தது. பின்னர் மின் ஆற்றல் அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், மரபுசாரா ஆற்றல் அமைச்சகம் என்று, இந்த அமைச்சகம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. 2006ல் பின்னது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. About ministry, Ministry of Power (India), archived from the original on 2012-10-26, பார்க்கப்பட்ட நாள் 2012-08-03

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]