ஜல் சக்தி அமைச்சகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜல் சக்தி அமைச்சகம்
துறை மேலோட்டம்
அமைப்புமே 2019[1]
ஆட்சி எல்லைஇந்தியக் குடியரசு
பொறுப்பான அமைச்சர்கள்
வலைத்தளம்www.mowr.gov.in

ஜல் சக்தி அமைச்சகம் (Ministry of Jal Shakti) மே, 2019-இல் நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையின் போது நீர் ஆராதரங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்பரவு அமைச்சககளை ஒன்றிணைத்து புதிய அமைச்சகமாக நிறுவப்பட்டது.[1] இந்த அமைச்சகத்தின் உருவாக்கம் கடந்த சில சகாப்தங்களாக நாடு எதிர்கொள்ளும் பெருகிவரும் நீர் சவால்களுக்கு இந்தியாவின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது.[2]

பணிகள்[தொகு]

கங்கை ஆற்றை தூய்மை செய்யும் நோக்கத்துடன் ஜல்சக்தி அமைச்சகத்துடன் நீர் ஆராதரங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்பரவு அமைச்சககளை ஒன்றிணைக்கப்பட்டது. அண்டை நாடுகளுடன் இந்தியா பகிர்ந்து கொள்ளும் நதிகளுக்கு இடையிலான எந்தவொரு சர்வதேச அல்லது தேசிய மோதல்களையும் இந்த அமைச்சகம் எதிர்கொள்ளும்.[3]

கங்கை மற்றும் அதன் துணை நதிகளை சுத்தம் செய்வதற்காக நாட்டின் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக "நமாமி கங்கா" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.[4]

அமைச்சர்கள்[தொகு]

ஜல்சக்தி அமைச்சகத்தின் அமைச்சராக கஜேந்திர சிங் செகாவத் உள்ளார். அவருக்குத் துணையாக பிரகலாத் சிங் படேல் மற்றும் பிஸ்வேஷ்வர் துடு ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜல்_சக்தி_அமைச்சகம்&oldid=3756909" இருந்து மீள்விக்கப்பட்டது