உள்ளடக்கத்துக்குச் செல்

ஒய். பி. சவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒய். பி. சவாண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒய். பி. சவான்
Yashwantrao Chavan
5வது இந்திய துணைப் பிரதமர்
பதவியில்
28 சூலை 1979 – 14 சனவரி 1980
பிரதமர்சரண் சிங்
முன்னையவர்சரண் சிங்
ஜெகசீவன்ராம்
பின்னவர்தேவிலால்
உட்துறை அமைச்சர்
பதவியில்
28 சூலை 1979 – 14 சனவரி 1980
பிரதமர்சரண் சிங்
முன்னையவர்மொரார்ஜி தேசாய்
பின்னவர்ஜெயில் சிங்
பதவியில்
14 நவம்பர் 1966 – 27 சூன் 1970
பிரதமர்இந்திரா காந்தி
முன்னையவர்குல்சாரிலால் நந்தா
பின்னவர்இந்திரா காந்தி
வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
10 அக்டோபர் 1974 – 24 மார்ச் 1977
முன்னையவர்சுவரண் சிங்
பின்னவர்அடல் பிகாரி வாச்பாய்
நிதியமைச்சர்
பதவியில்
27 சூன் 1970 – 10 அக்டோபர் 1974
பிரதமர்இந்திரா காந்தி
முன்னையவர்இந்திரா காந்தி
பின்னவர்சி. சுப்பிரமணியம்
பாதுகாப்புத்துறை அமைச்சர்
பதவியில்
14 நவம்பர் 1962 – 14 நவம்பர் 1966
பிரதமர்ஜவகர்லால் நேரு
குல்சாரிலால் நந்தா (பதில்)
லால் பகதூர் சாஸ்திரி
குல்சாரிலால் நந்தா (பதில்)
இந்திரா காந்தி
முன்னையவர்ஜவகர்லால் நேரு
பின்னவர்சுவரண் சிங்
1வது மகாராட்டிர முதலமைச்சர்
பதவியில்
1 மே 1960 – 14 நவம்பர் 1962
ஆளுநர்சிறீ பிரகாசா
ப. சுப்பராயன்
விஜயலட்சுமி பண்டித்
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்எம். கன்னம்வார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
யசுவந்த்ராவ் சவான்
यशवंतराव बळवंतराव चव्हाण

(1913-03-12)12 மார்ச்சு 1913
தேவ்ராட்த்ரா, மும்பை, பிரித்தானிய இந்தியா
இறப்பு25 நவம்பர் 1984(1984-11-25) (அகவை 71)
புது தில்லி, தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1977 இற்கு முன்; 1981–1984)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு(1977)
ஜனதா கட்சி (1977–1978)
இந்திய தேசிய காங்கிரசு (சோசலிஸ்ட்)(1978–1981)
துணைவர்வேணுத்தாய் சவான்
முன்னாள் கல்லூரிமும்பை பல்கலைக்கழகம்

யசுவந்த்ராவ் சவாண் (Yashwantrao Balwantrao Chavan 12 மார்ச்சு 1913–25 நவம்பர் 1984) இந்திய அரசியல்வாதி . ஒய்.பி.சவாண் என அறியப்படும் இவர் மராட்டிய மாநில முதலமைச்சராகவும் இந்திய நடுவணரசின் துணைப்பிரதமராகவும் பதவி வகித்தவர். மேலும் நடுவணரசின் உள்துறை அமைச்சர், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் ஆகிய பதவிகளிலும் இருந்தவர்.[1][2][3]

இளமைக்காலம்

[தொகு]
சவான் அவரது குடும்பத்துடன்

மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் உள்ள தேவராசுதிரே என்னும் சிற்றூரில் பிறந்தார். இளம் அகவையில் தந்தையை இழந்த சவாண் தம் தாயின் கவனிப்பில் வளர்ந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

மாணவராக இருக்கும்போதே இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1940 ஆம் ஆண்டில் சத்தாரா மாநில காங்கிரசு தலைவர் ஆனார். 1942 இல் அனைத்திந்திய காங்கிரசு மும்பை மாநாட்டில் கலந்து கொண்டார். அதே ஆண்டில் நிகழ்ந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது ஆனார். 1944 இல் சிறையிலிருந்து விடுதலை ஆனார்.

பதவிகளும் பொறுப்புகளும்

[தொகு]

1962 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் சவகர்லால் நேருவால் இவர் பாதுகாப்பு அமைச்சராக அமர்த்தப்பட்டார். 1978 இல் இந்திய காங்கிரசுக் கட்சி இரண்டாகப் பிரிந்தபோது இந்திரா காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தார். 1979 இல் கரன்சிங் தலைமையிலான அமைசச்சரவையில் ஒய்.பி.சவாண் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதம அமைச்சராகவும் ஆனார். 1981 இல் இந்திரா காங்கிரசில் மீண்டும் சேர்ந்தார். 1982 இல் 8 ஆவது நிதிக்குழுவின் தலைவராக அமர்த்தப்பட்டார்.

மற்ற பணிகள்

[தொகு]

ஒய்.பி.சவாண் சமூக அறிவியலில் நாட்டம் கொண்டவர். மராட்டிய மாநிலத்தில் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தினார். மராத்திய சாகித்திய மண்டல் என்னும் ஓர் இலக்கிய அமைப்பை தோற்றுவித்தார். மராத்தி விசுவ கோசு என்னும் மராத்திய மொழி கலைச் சொற்கள் தொகுப்புப் பணியில் முன்னின்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.idsa.in/event/InauguralYBChavanMemorialLecture
  2. "YASHWANTRAO BALWANTRAO CHAVAN". Archived from the original on 2018-10-09. பார்க்கப்பட்ட நாள் 2016-09-21.
  3. Yashwantrao Balwantrao Chavan

வெளி இணைப்புகள்

[தொகு]


அரசியல் பதவிகள்
புதிய அலுவலகம் மகாராட்டிரா முதலமைச்சர்களின் பட்டியல்
1960–1962
பின்னர்
மரோத்ராவ் கண்ணம்வர்
முன்னர் பாதுகாப்புத் துறை அமைச்சர்
1962–1966
பின்னர்
முன்னர் உள்துறை அமைச்சர்
1966–1970
பின்னர்
முன்னர் நிதியமைச்சர்
1971–1974
பின்னர்
முன்னர் வெளியுறவுத் துறை அமைச்சர்
1974–1977
பின்னர்
முன்னர் இந்திய துணைப் பிரதமர்
1979–1980
பின்னர்
முன்னர்
முன்னர்
ஹிருபாய் எம். படேல்
உள்துறை அமைச்சர்
1979–1980
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒய்._பி._சவான்&oldid=3610481" இலிருந்து மீள்விக்கப்பட்டது