இந்தியப் பொதுத் தேர்தல், 1984

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியப் பொதுத் தேர்தல், 1984

← 1980 டிசம்பர் 24, 27 மற்றும் 28, 1984 [1] 1989 →

மக்களவைக்கான 514 தொகுதிகள்
  First party Second party
  Rajiv-Sapta.jpg NT Rama Rao.jpg
தலைவர் ராஜீவ் காந்தி என். டி. ராமராவ்
கட்சி காங்கிரசு தெதேக
கூட்டணி காங்கிரசு
தலைவரின் தொகுதி அமேதி போட்டியிடவில்லை
வென்ற தொகுதிகள் 414 30
மாற்றம் Green Arrow Up Darker.svg61 புதிய கட்சி
விழுக்காடு 50.70 4.31%

Lok Sabha Zusammensetzung 1984.svg

முந்தைய இந்தியப் பிரதமர்

இந்திரா காந்தி
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

ராஜீவ் காந்தி
காங்கிரசு

இந்தியக் குடியரசின் எட்டாம் நாடாளுமன்றத் தேர்தல் 1984 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு எட்டாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. இந்திரா காந்தியின் படுகொலையால் கிட்டிய அனுதாப அலையால். இந்திய தேசிய காங்கிரசு எளிதில் வென்று ராஜீவ் காந்தி இரண்டாம் முறையாக பிரதமரானார்.

பின்புலம்[தொகு]

இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். ஆனால் இத்தேர்தல் 514 தொகுதிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டது. பஞ்சாப் மற்றும் அசாம் மாநிலங்களில் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய பிரிவினைப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்ததால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. சில மாதங்கள் கழித்து 1985ம் ஆண்டு நடைபெற்றது. முந்தைய தேர்தலில் வென்று பிரதமரான இந்திரா காந்தி 1984 அக்டோபரில் தனது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின் அவரது இளைய மகன் ராஜீவ் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தலைவாகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கபட்டார். நாடாளுமன்ற மக்களவைக்கு 6 மாதங்கள் மட்டுமே வாழ்நாள் மீதம் இருந்ததால், 1984யிலேயே இராஜீவ் தலைமையிலான ஒன்றிய அரசு பரிந்துரைப்படி, குடியரசு தலைவர் மக்களவையை கலைத்தார். மக்களவைக்கு பொது தேர்தல் அறிவிக்கப்பட்டது.. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமராகவே தான் இருக்க விரும்புவதாக இராஜீவ் தெரிவித்தார். இந்திரா காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட நாடளாவிய அனுதாப அலையால் காங்கிரசு பெருவெற்றி கண்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியே எந்த கட்சியும் 51 இடங்களில் வெல்லவில்லை. இத்தேர்தலில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சிகளோ கூட்டணிகளோ எதுவும் ஏற்படவில்லை. காங்கிரசுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வந்தது. தேசிய அளவில் எதிர்க்கட்சியான முதல் மாநில கட்சி என்ற நிலையை தெலுங்கு தேசம் கட்சி பெற்றது. சில மாதங்கள் கழித்து அசாமிலும் பஞ்சாபிலும் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை பொது தேர்தல்களிலும் காங்கிரசு பெருவாரியான இடங்களை வென்றது.

முடிவுகள்[தொகு]

மொத்தம் 63.56 % வாக்குகள் பதிவாகின

கட்சி % இடங்கள்
காங்கிரசு 49.01% 404
சிபிஎம் 5.87% 22
தெலுங்கு தேசம் 4.31% 30
அதிமுக 1.69% 12
ஜனதா கட்சி 6.89% 10
சிபிஐ 2.71% 6
இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) 1.52% 4
லோக் தளம் 5.97% 3
புரட்சிகர சோசலிச கட்சி 0.50% 3
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 0.43% 3
பாஜக 7.74% 2
திமுக 2.42% 2
பார்வார்டு ப்ளாக் 0.45% 2
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 0.28% 2
கேரள காங்கிரசு (ஜோசப்) 0.25% 2
இந்திய காங்கிரசு (ஜெ) 0.64% 1
இந்தியக் குடியானவர் மற்றும் தொழிலாளர் கட்சி 0.20% 1
  • குறிப்பு: அதிமுக காங்கிரசு கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]