மைதிலி சிவராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மைதிலி சிவராமன்
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)

மைதிலி சிவராமன் ஒரு இந்திய அரசியல்வாதியும் பெண் உரிமைச் செயல்பாட்டாளரும் ஆவார். தற்போது இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) இன் பெண்கள் பிரிவான அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவராக உள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மைதிலி சிவராமன் 1966-68 காலகட்டத்தில் ஐநா சபைக்கான இந்திய நிரந்தர தூதுக்குழுவில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார். மூன்றாம் உலக நாடுகளில் தன்னாட்சி அதிகாரம் இல்லாத பகுதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் காலனிமயமழிதல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். ஐநா சபைப் பணிக்காலம் முடிந்த பின் இந்தியா திரும்பி இடதுசாரி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். தற்போது தொழிற்சங்கவாதியாகவும் பெண் உரிமைச் செய்ல்பாட்டாளராகவும் நன்கறியப்படுகிறார்.[2]

கீழ்வெண்மணிப் படுகொலைகளை உலகின் கவனத்துக்கு கொண்டு வந்ததில் மைதிலியின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு குறித்து அவர் எழுதிய பத்திகளும் கட்டுரைகளும் “ஹாண்டட் பை ஃபையர்” (Haunted by Fire) என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளன.[3] வாச்சாத்தி வன்முறை நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்களை நேர்கண்டு அதனைப் பற்றிய உண்மைகளை ஆவணப்படுத்தியுள்ளார். நிகழ்வு குறித்து இந்திய பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தோன்றி வாதிட்டார்.[4]

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

  • பெண்களும் மதசார்பின்மையும் (1993), சவுத் ஏசியன் புக்ஸ்[5]
  • பெண்ணுரிமை (1997), தமிழ் புத்தகாலயம்[5]
  • சமூகம் - ஒரு மறு பார்வைi (1998), தமிழ் புத்தகாலயம்[5]
  • ஆண் குழந்தை தான் வேண்டுமா (2005), தமிழ் புத்தகாலயம்[5]
  • கல்வித்துறையால், வறுமையால் நசுக்கப்படும் குழந்தைகள், பாரதி புத்தகாலயம்[5]
  • ஒரு வாழ்க்கையின் துகள்கள்[6]
  • ஹாண்டட் பை ஃபயர் (2013), லெஃப்ட் வோர்ட் பப்ளிகேஷன்ஸ்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைதிலி_சிவராமன்&oldid=2694509" இருந்து மீள்விக்கப்பட்டது