உள்ளடக்கத்துக்குச் செல்

கே. எஸ். அழகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீ. ச. அழகிரி
மாநிலத் தலைவர், தமிழ்நாடு காங்கிரசு
பதவியில்
பெப்ரவரி 2019 – பெப்ரவரி 2024
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2014
தொகுதிகடலூர்
சட்டப் பேரவை உறுப்பினர் (தமிழ்நாடு)
பதவியில்
1991–2001
தொகுதிசிதம்பரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1952
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் கல்லூரிஅண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்
வேலைஅரசியல்வாதி

கீ. ச. அழகிரி (K. S. Alagiri) என்பவர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாடு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தார்.[1] 2009ஆம் ஆண்டு நடைபெற்ற கடலூர் மக்களவை தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[2] முன்னதாக, இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகச் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் 1991ஆம் ஆண்டும், தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராக 1996ஆம் ஆண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.[3][4]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தினைச் சேர்ந்த இவர், 1952ஆம் ஆண்டு பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

வகித்தப் பதவிகள்

[தொகு]
  • மாநிலத் தலைவர் - தமிழ்நாடு காங்கிரசு (பிப்ரவரி 2019 - பிப்ரவரி 2024)
  • இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் (2009-2014)
  • தமிழகத்தின் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர். (1991-2001)

போட்டியிட்டத் தேர்தல்கள்

[தொகு]

மக்களவைத் தேர்தல்கள்

[தொகு]
ஆண்டு தேர்தல் கட்சி தொகுதி முடிவு வாக்குகள் பெற்றன வாக்குப் பங்கு (%)
2009 15 வது மக்களவை இந்திய தேசிய காங்கிரஸ் கடலூர் (வெற்றி) 3,20,473 42.76
2014 16 வது மக்களவை இந்திய தேசிய காங்கிரஸ் கடலூர் 3வது இடம் 26,650 2.71

சட்டமன்றத் தேர்தல்கள்

[தொகு]
ஆண்டு தேர்தல் கட்சி சட்டமன்ற தொகுதி முடிவு பெற்ற வாக்குகள் பெற்ற வாக்குகள் (%)
1991 தமிழகத்தின் 10 வது சட்டமன்றம் இந்திய தேசிய காங்கிரஸ் சிதம்பரம் வெற்றி 48,767 49.54
1996 தமிழகத்தின் 11 வது சட்டமன்றம் தமிழ் மாநில காங்கிரஸ் சிதம்பரம் வெற்றி 52066 48.02
  • இந்திய தேர்தல் ஆணையம் முடிவுகள் :, 1991, 1996

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கீ. ச. அழகிரி நியமனம்". தினத்தந்தி. 2 பெப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
  3. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  4. 1996 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._அழகிரி&oldid=3929209" இலிருந்து மீள்விக்கப்பட்டது