இராசிபுரம் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராசிபுரம் (Rasipuram Lok Sabha constituency) தொகுதி மறுசீரமைப்புக்கு முன் தமிழ்நாட்டில் இருந்த மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.

இங்கு காங்கிரசு கட்சியை சார்ந்த தேவராசன் ஐந்து முறை வென்றுள்ளார். கடைசியாக இராசிபுரம் தொகுதியின் மக்களவை உறுப்பினர் காங்கிரசுக் கட்சியின் இராணி. இராசிபுரத்தில் ஆறுமுறை காங்கிரசு வென்றுள்ளது, அதிமுக இரண்டு முறையும், தமாகா ஒரு முறையும் வென்றுள்ளன.

தொகுதி மறு சீரமைப்பிற்கு பின் இராசிபுரம் தொகுதி நீக்கப்பட்டு விட்டது. இதற்கு பதிலாக புதியதாக உருவாகியுள்ள தொகுதி நாமக்கல்.

தொகுதியில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இதில் அடங்கும் சட்டசபைத் தொகுதிகள்:[1]

87-சங்ககிரி

92-இராசிபுரம்

93-சேந்தமங்கலம்

94-நாமக்கல்

95-பரமத்தி வேலூர்

96-திருச்செங்கோடு

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு காலம் வெற்றிபெற்றவர் கட்சி
ஆறாவத் 1977-80 பி. தேவராஜன் இந்திய தேசிய காங்கிரசு
எழாவது 1980-84 பி. தேவராஜன் இந்திய தேசிய காங்கிரசு
எட்டாவது 1984-89 பி. தேவராஜன் இந்திய தேசிய காங்கிரசு
ஒன்பதாவது 1989-91 பி. தேவராஜன் இந்திய தேசிய காங்கிரசு
பத்தாவது 1991-96 பி. தேவராஜன் இந்திய தேசிய காங்கிரசு
பதினொன்று 1996-98 கா. கந்தசாமி தமிழ் மாநில காங்கிரசு
பன்னிரண்டு 1998-99 வி. சரோஜா அதிமுக
பதிமூன்று 1999-04 வி. சரோஜா அதிமுக
பதிநான்கு 2004-2009 கே. இராணி இந்திய தேசிய காங்கிரசு

2004 தேர்தல் முடிவு[தொகு]

பொதுத் தேர்தல், 2004: இராசிபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா K.இராணி 384,170 55.20% n/a
அஇஅதிமுக S.அன்பழகன் 249,637 35.87% -11.54
ஐஜத அய்யாசாமி 24,522 3.52% n/a
சுயேச்சை R.ரவி 12,286 1.77% n/a
வாக்கு வித்தியாசம் 134,533 19.33% +13.36
பதிவான வாக்குகள் 695,990 61.46% +6.09
இதேகா கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. 2006-05-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2008-10-09 அன்று பார்க்கப்பட்டது.