உள்ளடக்கத்துக்குச் செல்

சுப்புலட்சுமி ஜெகதீசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுப்புலட்சுமி ஜெகதீசன்
2007இல் சுப்புலட்சுமி ஜெகதீசன்
ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணை அமைச்சர்
பதவியில்
2004–2009
சமூக நலத்துறை அமைச்சர் (தமிழ்நாடு அரசு)
பதவியில்
1989–1991
துணி, காதி, கைத்தறி, சிறுதொழில் துறை அமைச்சர் (தமிழ்நாடு அரசு)
பதவியில்
1977–1980
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
2004–2009
முன்னையவர்மு. கண்ணப்பன்
தொகுதிதிருச்செங்கோடு
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1996–2001
முன்னையவர்கவிநிலவு தர்மராஜ்
பின்னவர்பி. சி. இராமசாமி
தொகுதிமொடக்குறிச்சி
பதவியில்
1989–1991
முன்னையவர்சு. முத்துசாமி
பின்னவர்சு. முத்துசாமி
தொகுதிஈரோடு
பதவியில்
1977–1980
முன்னையவர்மு. சின்னசாமி
பின்னவர்எஸ். பாலகிருஷ்ணன்
தொகுதிமொடக்குறிச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 சூன் 1947 (1947-06-24) (அகவை 78)
கொடுமுடி, ஈரோடு மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிதிமுக
பிற அரசியல்
தொடர்புகள்
அதிமுக
துணைவர்ஏ. பி. ஜெகதீசன்
உறவுகள்கவுண்டர் வி. எஸ். சின்னுசாமி (தந்தை), சி. அங்கத்தாள் (தாய்)
பிள்ளைகள்1 மகன், மருத்துவர் ஜெயபிரகாஷ் ஜெகதீசன்
வாழிடம்ஈரோடு
கல்விபிஎஸ்சி., பி.டி., சிறீ சங்கர வித்யா சாலை, கொடுமுடி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சி மற்றும் ஸ்ரீ சாரதா கல்லூரி, சேலம்.
22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

சுப்புலட்சுமி ஜெகதீசன் (Subbulakshmi Jagadeesan, பிறப்பு: 24 சூன் 1947) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சரும், ஒன்றிய சமூக நீதித்துறை முன்னாள் அமைச்சரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் நூழைவதற்கு முன்பு ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உதவி தலைமையாசிரியையாகப் பணிபுரிந்தவர். ஆசிரியர் பதவியில் இருந்து விலகிய இவர் அதிமுகவில் இணைந்து 1977[1] சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று அதிமுக அமைச்சரவையில் கதர் துறை அமைச்சராக இடம்பெற்றார். 1980இல் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.[2]

1989 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று திமுக அமைச்சரவையில் சமூகநலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.[3] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக இவரும், இவரின் கணவர் ஜெகதீசனும் 1992இல் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சுமார் 300 நாட்கள் சிறையிலிருந்த இவர்கள் 1998இல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

1996 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அத்தொகுதியில் விவசாயிகள் கோரிக்கைகளை முன்னிருத்தி 1,030 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. ஒரு மாதத்திற்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றிபெற்றார். இவரது அரசியல் வாழ்வில் ஈரோடு, மொடக்குறிச்சி, வெள்ளக்கோயில் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வென்று மு. கருணாநிதியின் அமைச்சரவையில் இருமுறை இடம்பெற்றுள்ளார்.[4]

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமியை எதிர்த்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[5] பின்னர் அமைந்த மன்மோகன் சிங்கின் ஒன்றிய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் வலுவூட்டல் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.[5]

அரசியலில் இருந்து விலகல்

[தொகு]

திமுகவில் உயர்நிலைப் பதவிகளில் ஒன்றான துணைப் பொதுச் செயலாளராக இருந்த சற்குண பாண்டியனின் மறைவிற்குப் பிறகு சுப்புலட்சுமி ஜெகதீசன் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத இவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இந்நிலையில் 2022 ஆகத்து 29 அன்று கட்சிப் பதவியிலிருந்தும், திமுகவிலிருந்தும் விலகுவதாக திமுக தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளதாக 2021 செப்டம்பரில் அறிவித்தார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 418-419.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. "திமுகவிலிருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன் - 45 ஆண்டுகால அரசியல் பயணம் நிறைவு; தலைமை மீதான அதிருப்தி காரணமா?". Hindu Tamil Thisai. Retrieved 2022-09-22.
  3. Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 125.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  4. "சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகக் காரணம் என்ன?". Dinamani. Retrieved 2022-09-22.
  5. 5.0 5.1 "Jagadeesan,Smt. Subbulakshmi". Lok Sabha. Archived from the original on 17 சூன் 2012. Retrieved 2 May 2011.
  6. Selvaraj, Vignesh (2022-09-20). "சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிரடி முடிவை எடுத்தது ஏன்..?- 2021 தேர்தல் முதல் திமுக உட்கட்சி தேர்தல் வரை!". Retrieved 2022-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்புலட்சுமி_ஜெகதீசன்&oldid=4465899" இலிருந்து மீள்விக்கப்பட்டது