உள்ளடக்கத்துக்குச் செல்

மணிசங்கர் அய்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிசங்கர் அய்யர்
முன்னாள் மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சர்
தொகுதிமயிலாடுதுறை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 4, 1941 (1941-10-04) (அகவை 83)
லாகூர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்சுனித்
பிள்ளைகள்3மகள்கள்
வாழிடம்டில்லி
இணையத்தளம்www.manishankaraiyar.com

மணிசங்கர் அய்யர் (Mani Shankar Aiyar) இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் ஆவார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள காருகுடி கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட இவர் லாகூரில் 10-04-1941ல் பிறந்தார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் , அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும்,1991,1999, 2004 ஆகிய மூன்றுமுறை மயிலாடுதுறை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 2004-2009 வரை மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மணி சங்கர் அய்யர் 1973 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஆம் தேதியன்று சீக்கியப் பெண்ணான சுனீத் வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர் - மூத்தவர், சுரண்யா ஐயர் ஒரு வழக்கறிஞர்;[1] இரண்டாவது, யாமினி ஐயர் ஒரு மூத்த ஆராய்ச்சி உறுப்பினரவார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Aiyar, Yamini; Kapur, Avani (5 October 2016). "Opinion: Swachh Bharat Mission's Success Is Greatly Exaggerated". NDTV.com. https://www.ndtv.com/opinion/swachh-bharat-after-pms-big-push-where-it-has-faltered-1469495?pfrom=home-opinion. 
  2. "Mani Shankar Aiyar's daughter weds" (in en-IN). The Hindu. 27 November 2006. https://www.thehindu.com/todays-paper/tp-national/mani-shankar-aiyars-daughter-weds/article3053378.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிசங்கர்_அய்யர்&oldid=4101981" இலிருந்து மீள்விக்கப்பட்டது