எம். பழனியாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மருதையா பழனியாண்டி
பெரம்பலூர் மக்களவை
பிரதமர் சவகர்லால் நேரு
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 10, 1918(1918-12-10)
இறப்பு 9 மார்ச்சு 2005(2005-03-09) (அகவை 86)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு,
தமிழ் மாநில காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) எம்.புனிதவள்ளி
தொழில் அரசியல்வாதி

மருதையா பழனியாண்டி (10 டிசம்பர் 1918 - 9 மார்ச் 2005) ஒரு இந்திய அரசியல்வாதியாக மற்றும் தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். அவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராகவும் பின்னர் தமிழ் மாநில காங்கிரசு கட்சியில் உறுப்பினராகவும் இருந்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

பழனியாண்டி 10 டிசம்பர் 1918 இல் பிறந்தார். திருமதி.எம்.புனிதவள்ளியை மணந்தார்.இத் தம்பதியருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உண்டு.

அரசியல்[தொகு]

இவா் பத்தாம் வகுப்பு படிப்பை முடித்த பின், அரசியலில் நுழைந்து தொழிற்சங்கத் தலைவரானார். 1952 ஆம் ஆண்டு லால்குடியிலிருந்து சென்னை மாகாண சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 ஆம் ஆண்டு மற்றும் 1957 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெரம்பலூர் மக்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா். பழனியாண்டி 1957 முதல் 1962 வரை மக்களவையில் உறுப்பினராக இருந்தார்.1986 முதல் 1992 வரை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1983 முதல் 1988 வரை இந்திய தேசிய காங்கிரசின் தமிழக குழுவின் தலைவர் ஆவார். 1996 ல் தமிழ் மாநில காங்கிரசில் ஜி.கே.மூப்பனாருடன் இணைந்தாா்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._பழனியாண்டி&oldid=2781051" இருந்து மீள்விக்கப்பட்டது