உள்ளடக்கத்துக்குச் செல்

கே. சி. பழனிசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. சி. பழனிசாமி
இந்திய மக்களவை திருச்செங்கோடு தொகுதி உறுப்பினர்
பதவியில்
1989–1991
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதமிழ்நாடு, சென்னிமலை
அரசியல் கட்சிஅதிமுக(1977-2017)
துணைவர்சௌந்தரி
பிள்ளைகள்கேசிபி சுரேஷ், கேசிபி கார்த்திக்
வாழிடம்கோயம்புத்தூர்
As of 22 செப்டம்பர், 2006

கே. சி. பழனிசாமி (K. C. Palanisamy) (பிறப்பு: 7 திசம்பர் 1959 சென்னிமலை ஈரோடு மாவட்டம்) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய நாடாளுமன்றத்தின் திருச்செங்கோடு தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.[1] அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராக அரசியலில் செயல்பட்டார்.[2] தமிழ்நாடு சட்டமன்ற காங்கேயம் தொகுதி முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த இவர் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொறியியல் பயின்றார். 1972-இல், எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியைத் தொடங்கியபோது, தனது 13 வயதில் கட்சி உறுப்பினராகச் சேர்ந்தார். 1983-இல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிமுகவின் எம்.ஜி.ஆர் இளைஞரணிக்கு 23 வயதில் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு ஏறத்தாழ 16,000 வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். தனது 24 வயதில் தமிழ்நாட்டுச் சட்டமன்ற உறுப்பினரான, இளைய அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றார். 1989-இன் தேர்தலில், தென்னிந்தியாவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்று திருச்செங்கோடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

பள்ளிப் பருவத்திலேயே கே.சி.பழனிசாமி எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். தனது ஒன்பதாவது வயதில், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் பரப்புரையின் போது எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்பதை கே.சி.பழனிசாமி உணர்ந்ததும், சமூகம் குறித்த கருத்துகளையும் பார்வைகளையும் உருவாக்கும் திறன் அவருக்குக் கிடைத்ததும் இங்குதான்.

வகித்த பதவிகள்
கோவை நகர மாவட்ட இளைஞர் அணி துணை மாவட்டச் செயலாளர் 1982 -
சட்டமன்ற உறுப்பினர் – காங்கேயம் 1984 - 1988
நாடாளுமன்ற உறுப்பினர் – திருச்செங்கோடு 1989 - 1991

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கே.சி.பழனிசாமி:அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தினாரா? - விரிவான தகவல்கள்". BBC News தமிழ். Retrieved 2025-01-25.
  2. Reporter, Staff (2020-02-13). "I am still with AIADMK, says K.C. Palanisamy". The Hindu (in Indian English). Retrieved 2025-01-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._பழனிசாமி&oldid=4295398" இலிருந்து மீள்விக்கப்பட்டது