தாராமதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாராமதி (Taramati) என்பது அரிச்சந்திரகாட்டில் உள்ள இரண்டு சிகரங்களில் ஒன்று. இது மகாராட்டிரா மாநிலத்தின் ஆறாவது உயரமான சிகரமாகும் (கடல் மட்டத்திலிருந்து 1431 மீ/ 4695அடி). சல்ஹருக்குப் அடுத்த தரவரிசையில் உள்ளது . அரிச்சந்திரகாட் பீடபூமியில் அமைந்துள்ள இந்த இடம், இதன் தனித்துவமான அழகு காரணமாகச் சிறந்த மலையேற்ற அனுபவத்தை வழங்குகிறது.[1] இந்தியாவின் ஐதராபாத் அருகே தாராமதி என்ற மற்றொரு பிரபலமான பெயரும் உள்ளது. தாராமதி 14ஆம் நூற்றாண்டில் குதுப் ஷாஹி ஆட்சியாளர்களின் அவையின் பிரபலமான பாடகர் ஆவார். மேலும் தாராமதி பரதாரி ஐதராபாத் நகரத்தில் உள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராமதி&oldid=3356685" இருந்து மீள்விக்கப்பட்டது