உள்ளடக்கத்துக்குச் செல்

கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம் (Kodaikanal Wildlife Sanctuary) என்பது பழனி மலைகள் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. 20ஆண்டுகாலப் பரிந்துரைகளுக்குப் பிறகு 2013இல் துவக்கப்பட்டது.

அமைவிடம்

[தொகு]

இவ் உய்விடம் திண்டுக்கல்,தேனி மாவட்டப் பகுதியில் 608.95 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.

காட்டுவகைகள்

[தொகு]

முட்புதர் காடு, இலையுதிர் காடு, பசுமைமாறாக் காடு, ஈர இலைக்காடு, மழைக்காடு, சோலைக்காடு, மலையுச்சிப் புல்வெளி எனப் பலவகையான காடுகள் உள்ளன.

உயிரினங்கள்

[தொகு]

யானை, வேங்கைப் புலி,சிறுத்தை, செந்நாய்,கரடி,வரையாடு, நரை அண‍ல்,மலபார் மலையணில்,கடமான் அல்லது மிளா, கேளையாடு,காட்டெருது உள்ளிட்ட பல வகை பாலூட்டி இனங்களும் பல அரியவகைத் தாவர இனங்களும், 100 வகை பறவையினங்களும் இங்கு காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓரிடவாழ் பறவைகளான நீலகிரி காட்டுப்புறா, நீலகிரி நெட்டைக்காலி, குட்டை இறக்கையன் போன்ற அரியவகைப் பறவைகளும் இப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. [1]

மேற்கோள்

[தொகு]