கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்
—  wildlife sanctuary  —
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்
இருப்பிடம்: கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்
, தமிழ் நாடு , இந்தியா
அமைவிடம் 10°19′N 79°52′E / 10.31°N 79.86°E / 10.31; 79.86ஆள்கூறுகள்: 10°19′N 79°52′E / 10.31°N 79.86°E / 10.31; 79.86
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம்    =நாகப்பட்டினம்
Established 1967
அருகாமை நகரம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மக்களவைத் தொகுதி கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

21.47 சதுர கிலோமீட்டர்கள் (8.29 sq mi)

7 மீட்டர்கள் (23 ft)

தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்


     1,280 mm (50 in)

     24 °C (75 °F)
     32 °C (90 °F)

Visitation/year
Governing body தமிழ்நாடு வனத்துறை


கோடியக்கரை காட்டுயிர் உய்விடம் 1967ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கிய வனஉயிரின உய்விடம் ஆகும். இதன் பரப்பளவு 17.26 சதுர கி.மீ ஆகும். இந்தச் சரணாலயத்தில் பல்வேறுவிதமான கடல் பறவைகள் தென்படுகின்றன. வேறு நாடுகளிலிருந்து வலசை வரும் பறவைகளுக்கான புகலிடமாகவும் இது திகழ்ந்து வருகிறது. இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி அமைந்துள்ளது.[2]

இங்கு காணப்படும் தனிச்சிறப்பு வாய்ந்த சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரிய பறவையினங்களைக் காணலாம். இங்கு நரி, புள்ளி மான் போன்ற விலங்குகளையும் காணலாம்.

தான்தோன்றிக் குதிரைகள்[தொகு]

ஆங்கிலேயர்களால் வளர்க்கப்பட்டு பின்னர் விட்டுவிடப்பட்ட வளர்ப்புக் குதிரைகள் நாளடைவில் அடங்காமல் சுற்றித்திரியும் தான்தோன்றிக் குதிரைகளாக மாறிவிட்டன. இத்தகைய குதிரைகள் இங்கு காணப்படுகின்றன.

1000 ஆண்டுகள் பழைமையான கலங்கரை விளக்கம்[தொகு]

இங்கு 1000 ஆண்டுகள் பழைமையான சோழர் காலத்துக் கலங்கரை விளக்கம் ஒன்று சிதைந்த நிலையிற் காணப்படுகிறது.[1]

150 வகையான தாவரங்கள்[தொகு]

இப்பகுதியின் காடுகள் வெப்பமண்டல உலர் பசுமைமாறா காடுகள் ஆகும். இக்காப்பகத்தில் 150 வகையான தாவர வகைகள் காணப்படுகின்றன[3].

விலங்குகள்[தொகு]

இங்கு காணப்படும் விலங்குகள்: கலைமான், நரி, புள்ளி மான், காட்டுப்பன்றி, முயல், காட்டுக் குதிரைகள், ஆமை, குரங்கு.

பல்வேறு வகையான பறவைகள்[தொகு]

இவை தவிர இங்கு நூற்றுக்கும் கூடுதலான பறவை இனங்கள் காணப்படுகின்றன். பூநாரை போன்று பல்வேறு வகையான வட அரைக்கோளத்தை சேர்ந்த பறவைகள் ஆண்டு தோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் இங்கு வலசை வருகின்றன. அண்டார்டிக்காப் பகுதியில் இருந்தும் பறவைகள் இங்கு வருகின்றன [4].

இதர விவரம்[தொகு]

இக்காப்பகம் சாலை வழியே நாகப்பட்டினத்தில் இருந்து 60 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 110 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கு செல்வதற்கு நவம்பர் முதல் மார்ச், ஏப்ரல் வரை மிகவும் ஏற்ற காலமாகும்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International Chitragudi and Kanjirankulam Bird Sanctuary
  2. ந.வினோத் குமார் (2018 திசம்பர் 1). "‘கஜா’வோடு போன காட்டுயிர்கள்..!". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 1 திசம்பர் 2018.
  3. 3.0 3.1 http://www.forests.tn.nic.in/WildBiodiversity/ws_pcws.html
  4. http://thatstamil.oneindia.in/news/2007/12/04/tn-let-up-winged-visitors-coastal-sanctuary.html[தொடர்பிழந்த இணைப்பு]

படிமங்கள்[தொகு]