மேலசெல்வனூர்-கீழசெல்வனூர் பறவைகள் புகலிடம்
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகில் உள்ளது மேலசெல்வனூர்-கீழசெல்வனூர் பறவைகள் புகலிடம். இது 1998-ஆம் ஆண்டு புகலிடமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய புகலிடம் இதுவே; இதன் மொத்தப் பரப்பளவு 593.08 ஹெக்டேர் ஆகும்.[1]
எங்கு உள்ளது?
[தொகு]இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுக்காவில் மேல்செல்வனூர்-கீழ்செல்வனூர் கிராமக்குளங்கள்தாம் இந்த பறவை புகலிடமாக விளங்குகின்றன; இது 9 0 13 ’ வடக்கு, 78 0 32.30 ’ கிழக்கு நிலக்குறுக்குக்கோட்டில் அமைந்துள்ளது. இவ்விடம் மதுரையிலிருந்து 130 கி.மீ. தொலைவிலும் இராமநாதபுரத்திலிருந்து 47 கி.மீ., முதுகுளத்தூரிலிருந்து 27 கி.மீ., சாயல்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
தாவரவளம்
[தொகு]வன்னி மரத்தோப்பு (Prosopis thickets) நிறைந்தது இப்பகுதி; குளங்களில் காணப்படும் கருவேல மரங்கள் ( Acacia nilotica )கூடு கட்ட ஏற்றதாக உள்ளன.
மாவளம்
[தொகு]கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நத்தைகுத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், பலவகை கொக்குகள் ஆகிய புள்ளினங்கள் இங்கு கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழ்நாடு வனத்துறை". Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2010-01-26.
வெளியிணைப்புகள்
[தொகு]- வனத்துறை - [1] பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்
தொடர்புக்கு
[தொகு]Wild life warden, Gulf of Mannar biosphere reserve, Mandapam, Ramanathapuram. Phone:04567-230079