பழவேற்காடு பறவைகள் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் (Pulicat Lake Bird Sanctuary) தமிழ் நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பறவைகள் காப்பகம் ஆகும். பழவேற்காடு ஏரியின் மொத்த பரப்பளவு 481 சதுர கிமீ ஆகும். இதில் 153.67 சதுர கி.மீ. தமிழ்நாட்டின் எல்லையிலும், எஞ்சிய பகுதி ஆந்திர பிரதேசத்திற்கு உட்பட்ட நெல்லூர் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.[1] பழவேற்காடு ஏரியே இந்தியாவில் ஒரிசா மாநிலத்திலுள்ள சிலிக்கா ஏரிக்கு அடுத்து பெரிய கடற்கரைக் காயல் ஆகும்.[2] இந்த ஏரி உலகிலுள்ள முக்கியமான பறவை வாழ்விடங்களில் ஒன்றாகும் (முக்கியமான பறவை வாழ்விடங்கள் வரிசை எண்:IN261).[3]

பூநாரை

புவியியல்[தொகு]

இந்த ஏரியின் நடுப்பகுதியின் அளவு 13°34′N 80°12′E / 13.567°N 80.200°E / 13.567; 80.200. இப்பாதுகாக்கப்பட்ட பகுதியில் 108 சதுர கி.மி தேசிய பூங்காவாகும். இவ்விடத்தின் வருடாந்திர மழை பொழிவு 800 - 2000 மில்லி மீட்டர். தட்பவெப்பம் 14° to 33° செல்லியசு. இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 100’ to 1200’ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[2]

விலங்கு[தொகு]

இங்கு 160 வகையான மீன்களும், 12 வகையான இறால்களும், 19 வகையான மெல்லுடலிகளும், 100 வகையான பறவைகளும் காணப்படுகிறது. இவ்விடம் பூநாரைகளுக்கு மிகவும் புகழ் பெற்றதாகும்.[2][4]

அச்சுறுத்தல்கள்[தொகு]

இந்த ஏரியில் சேர்ந்துகொண்டிருக்கும் சேற்றின் அளவு மிகவும் அதிகமாகிக்கொண்டே இருப்பதால் இன்னும் 100 வருடத்தில் இந்த ஏரியே இல்லாமல் போய்விடும் அளவிற்கு சேறு சேர்ந்துவிடும் என்ற அச்சம் நிலவுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]