மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா
Dugong.jpg
கடற்பசு, அழிவிலிருக்கும் கடல் பாலூட்டி இனம்
Map showing the location of மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா
Map showing the location of மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா
தமிழ்நாட்டில் (இந்தியா) அமைவிடம்
அமைவிடம்இராமநாதபுரம் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா
கிட்டிய நகரம்இராமேசுவரம்
ஆள்கூறுகள்9°08′35″N 79°27′29″E / 9.143113°N 79.457932°E / 9.143113; 79.457932ஆள்கூறுகள்: 9°08′35″N 79°27′29″E / 9.143113°N 79.457932°E / 9.143113; 79.457932
பரப்பளவு560
நிறுவப்பட்டது1986
நிருவாக அமைப்புதமிழ்நாடு சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா (Gulf of Mannar Marine National Park) இந்தியாவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது 21 சிறிய தீவுகளையும், மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப் பாறைகளையம் உள்ளடக்கிய பகுதியாகும். தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்து 1 முதல் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா, தூத்துக்குடியில் இருந்து தனுட்கோடி வரையிலான கடற்பகுதியில் 160 கி.மீ நீளத்திற்குப் பரந்துள்ளது. பல்வகை தாவரங்களையும் விலங்குகளையும் இப்பூங்கா இதன் கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் கொண்டுள்ளது. பூங்காவின் உள்ளே பொதுமக்கள் கண்ணாடிப் படகுகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். [1]

சான்றுகள்[தொகு]

  1. Shaunak B Modi (2011). "Gulf of Mannar Marine National Park - Tamil Nadu Forest Dept. (GOMNP)". Gulf of Mannar Biosphere Reserve Trust. 2007-11-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-10-15 அன்று பார்க்கப்பட்டது.