நீலகிரி நெட்டைக்காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலகிரி நெட்டைக்காலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: மோடாசிலிடே
பேரினம்: ஆந்தசு
இனம்: ஆ. நீல்கிரியென்சிசு
இருசொற் பெயரீடு
ஆந்தசு நீல்கிரியென்சிசு
சார்ப்பி, 1885

நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri pipit)(Anthus nilghiriensis-ஆந்தசு நீல்கிரியென்சிசு) என்பது ஒரு தனித்துவமான பறவை இனமாகும். இப்பறவை தென்னிந்தியாவின் உயர்ந்த மலைப்பகுதிகளில் காணப்படும் அகணிய உயிரி பறவையாகும். இந்தப் பகுதியில் உள்ள மற்ற நெட்டைக்காலிகளைவிட இதன் நிறம் மிகுதியான பழுப்பு நிறத்தில் உள்ளது. நீலகிரி நெட்டைக்காலி 12.6-14 சென்டிமீட்டர் (5.0-5.5 அங்குலம்) நீளமுடையது.

வகைப்பாட்டியல்[தொகு]

 
 
 

ஆந்தசு ஹோட்க்சோனி

ஆந்தசு திரிவியேலிசு

''ஆந்தசு நீல்கிரியென்சிசு

 

ஆந்தசு கட்டுராலிசு

ஆந்தசு ரபிகோலீசு

வாழும் சிற்றினங்களின் இன உறவு வரலாறு[2]

இந்த சிற்றினம் முதன்முதலில் 1840ஆம் ஆண்டில் ஜெர்டன் என்பவரால் ஆந்தசு ரூபெசென்சு என்ற பெயரில் விவரிக்கப்பட்டது. ஏற்கனவே தெமிங் என்பவர் பலச்சிற்றினங்களுக்கு இப்பெயரினைப் பயன்படுத்தியுள்ளார். பிளைத் இதனை ஆந்தசு மோண்டானசு என்ற பெயரில் குறிப்பிடுகிறார். இருப்பினும் இவை தவறான பெயர்களாகும் 1885-ல் ரிச்சர்ட் பவுட்லர் சார்ப்பி என்பவரால் இது, ஆந்தசு நீல்கிரியென்சிசு என்ற பெயரில் மறுவிவரப்படுத்தப்பட்டது.[3]

நீலகிரி நெட்டைக்காலி, நெட்டைக்காலிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. பிளியோசீனிலிருந்து பிரிந்த ஆந்தசு திரிவியேலிசு மற்றும் ஆந்தசு ஹோட்க்சோனி ஆகியவற்றைக் கொண்ட கிளையின் ஒரு சகோதரச் சிற்றினமாகும்.[2]

The hind claw is stout and curved

வாழிடம்[தொகு]

நீலகிரி நெட்டைக்காலிகள் மலைசார் புல்தரைகள், சதுப்பு நிலப்பகுதிகள் போன்றவற்றை ஒட்டிய பகுதிகளில், பெரும்பாலும் 1,000 மீட்டர் (3,300 அடி) உயரத்தில் பொன்முடி மலைகளிலும்,நீலகிரி, பழனி மலைப்பகுதிகளில் 1,500 மீட்டர் (4,900 அடி) உயரப் பகுதிகளில் உள்ள மலை சரிவுகளில் சிறு நீரோடைகள் உள்ள இடங்களில் காணப்படுகின்றன. மேலும் இவை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.[4] பொதுவாக இந்த பறவை அழிந்து விட்டது என்று சொல்லப்படுகிறது.[5]

நடத்தை[தொகு]

நீலகிரி நெட்டைக்காலிகள் தனியாகவோ அல்லது இணையாகவோ காணப்படுகின்றன. அவை பொதுவாக தொந்தரவுக்கு ஆளாகும்போது குட்டைப் புதர், மரத்திற்குள் பறந்து சென்று மறைந்து கொள்கின்றன. இவை ஏப்ரல் முதல் ஜூலை வரை கோடைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. குட்டைப் புற்களில் புற்களைக் கொண்டு கூடுகட்டி, இரண்டு மூன்று சாம்பல் பழுப்பு நிறமுடைய முட்டைகள் இடுகின்றன. இவை இனப்பெருக்கக் காலத்தில் முதுகெலும்பில்லாத பூச்சிகளையும், புல் விதைகளையும் உணவுவாகக் கொள்கின்றன .

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anthus nilghiriensis
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: