கொய்னா ஆறு
Appearance
கொய்னா | |
ஆறு | |
கொய்னா ஆறு
| |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | மகாராட்டிரா |
பகுதி | கிருஷ்ணா ஆறு |
நீளம் | 130 கிமீ (81 மைல்) |
கொய்னா ஆறு (Koyna River) கிருஷ்ணா ஆற்றின் துணை ஆறாகும். கொய்னா ஆறு இந்திய மாநிலமான மகாராட்டிராவின் சாத்தாரா மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில், மஹாபலீஸ்வர் எனுமிடத்தில் உற்பத்தியாகிறது. கொய்னா ஆறு வடக்கு தெற்காக பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே கொய்னா நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. கொய்னா மின் உற்பத்தி திட்டம் இந்தியாவில் மிகப்பெரியதாகும்.[1] கொய்னா ஆறு 130 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்ந்து பின்னர் காரத் எனுமிடத்தில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது.
இதனையும் காண்க
[தொகு]- மஹாபலீஸ்வரில் பீடபூமியில் உற்பத்தியாகும் பிற நான்கு ஆறுகள்:
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". india-reports.com (india-reports.com) இம் மூலத்தில் இருந்து 2011-10-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111018034142/http://india-reports.com/articles/ElectricityInIndia/electricity_india_hydroelectric_largest_powerplant.aspx.