உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரளம் வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரளம் வனவிலங்கு சரணாலயம்
Aralam Wildlife Sanctuary
நுழைவாயில்
Map showing the location of ஆரளம் வனவிலங்கு சரணாலயம் Aralam Wildlife Sanctuary
Map showing the location of ஆரளம் வனவிலங்கு சரணாலயம் Aralam Wildlife Sanctuary
கேரளா, இந்தியா வரைபடம்
அமைவிடம்கேரளா, தென்மேற்கு இந்தியா
பரப்பளவு55 km2 (21 sq mi)
நிறுவப்பட்டது1984
www.aralam.org

ஆரளம் வனவிலங்கு சரணாலயம் (Aralam Wildlife Sanctuary) தென்மேற்கு இந்தியாவில் கேரளாவின் வடகோடியில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கு சரிவில் இச்சரணாலயம் 55 சதுரகிலோ மீட்டர் (21 சதுர மைல்) பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆரளம் சரணாலயத்தின் தலைமையகம் கண்ணூர் மாவட்டத்தின் தென்கிழக்கு பகுதியில் ஐரிட்டி நகராட்சிக்கு அருகிலும், தலசேரியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. 11 ° 54 'மற்றும் 11 ° 59' வடக்கு அட்சரேகை மற்றும் 75 ° 47 ' மற்றும் 75 ° 57' கிழக்கத்திய எல்லை ஆகிய ஆள்கூறுகளுக்கு இடையில் இச்சரணாலயம் அமைந்துள்ளது[1] இந்த சரணாலயத்தில் யானைகள், கரடிகள், கடமான்கள், சருகுமான் போன்ற விலங்குகள் உள்ளன.

ஆராம், கேலகம் மற்றும் கோட்டியூர் வருவாய் கிராமங்களில் இந்த சரணாலயம் பகுதி வருகிறது, கர்நாடக மாநிலத்தின் கூர்க் (குடகு) மாவட்டத்தின் காடுகளுடன் இணைந்த தொடர்ச்சியாக மேற்கு தொடர்ச்சி மலையின் வடமேற்கு சரிவுகளில் சரணாலயம் அமைந்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட இச்சரணாலயப் பகுதி பாலக்காட்டின் வடக்கு வனவிலங்கு வட்டப் (வடக்கு மண்டலம்) பகுதியிலுள்ள அரளம் வனவிலங்கு பிரிவின் ஒரே மலைத்தொடரான அரளம் மலைத்தொடரைக் கொண்டுள்ளது. சரணாலயத்தின் பரப்பளவு 55 சதுர கிலோமீட்டர் (21 சதுர மைல்) ஆகும். அக்டோபர் 15, 1984 தேதியிட்ட அரசாணை எண் (பி) 300/84 / ஏ.டியின் படி இந்த சரணாலயம் 1984 இல் நிறுவப்பட்டது.

தலச்சேரி சிறப்புப் பிரிவின் ஓடந்தோடு மாலவரம் பகுதிகளிலிருந்து ஒதுக்கிய பகுதி மூலம் இச்சரணாலயம் உருவாக்கப்பட்டது. முன்னதாக இப்பகுதி தனியார் வனமாக இருந்து பின்னர் கேரள தனியார் காடுகள் சட்டம் 1971 இன் அடிப்படையில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது.

சரணாலயத்தின் 32.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வனப்பகுதியிலும் 22.36 சதுர கிலோமீட்டர் பரப்பு கோட்டியூர் வனப்பகுதியிலும் அமைந்துள்ளது.

30.6.98 வரை வயநாடு வனவிலங்கு கோட்டத்தின் ஒரு பகுதியாக சரணாலயம் இருந்தது. 01.07.1998 முதல் 27.05.98 தேதியிட்ட அரசாணையின்படி தனிப்பட்ட சரணாலயமாக இயங்கத் தொடங்கியது.

முதல் மேலாண்மைத் திட்டத்தில் சரணாலயத்தின் முழுப் பகுதியும் உள்ளக மண்டலம் மற்றும் இடையக மண்டலம் என இரண்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. மழைப்பொழிவு, வெப்பநிலை, ஈரப்பதம், உறைபனி மற்றும் பலகாரணிகளை இம்மண்டலங்கள் உள்ளடக்கியிருந்தன.

•சராசரி மழைப்பொழிவு: 4000 மி.மீ •வெப்பம்: 11.0°செல்சியசு முதல் 40.0°செல்சியசு •ஈரப்பதம்: 60 முதல் 100 % •காற்று: தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் வழக்கமான காற்று •நீர் ஆதாரம்: சீன்கன்னிப்புழா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aralam Sanctuary". protectedplanet.net.