கும்பாவுருட்டி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கும்பாவுருட்டி அருவி
Kumbhavurutti Waterfall
കുംഭാവുരുട്ടി വെള്ളച്ചാട്ടം
Kumbavuruty water falls2.jpg
கும்பாவுருட்டி அருவி
அமைவிடம்கேரளம், கொல்லம் மாவட்டம்
வகைபிரிவுகளாய் கொட்டுவது
வீழ்ச்சி எண்ணிக்கை2
நீர்வழிஅச்சன்கோவில் ஆறு

கும்பாவுருட்டி அருவி (Kumbhavurutty Waterfalls) என்பது தென்னிந்தியாவின் பிரபலமான அருவி ஆகும். இது கேரளாத்தின், கொல்லம் மாவட்டத்தில், ஆரியங்காவு பஞ்சாயத்துக்கு அருகில் தமிழ்நாட்டு எல்லை அமைந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கும்பாவுருட்டி அருவியானது கேரளத்தில் மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் அருவிகளில் ஒன்றாகும். [1] சுற்றுலாவின் உச்ச காலங்களில், இந்த சுற்றுலா இடத்தின் தினசரி வசூல் ரூ. 1,50,000 ஆகும். இது அச்சன்கோவிலிலிருந்து சுமார் 6.5  கி.மீ. இல் உள்ளது. [2] இந்த அருவி அச்சன்கோவில் ஆற்றின் ஒரு பகுதியாகும். இதற்கு அருகிலுள்ள மற்றொரு முக்கியமான அருவி மணலாறு அருவி ஆகும். பயணிகளுக்கு நல்வாய்ப்பு இருந்தால் காட்டு விலங்குகளையும் பார்க்கலாம். ஏனெனில் அருவி அடர்த்தியான கொன்னி வனப்பகுதிக்கு மிக அருகில் உள்ளது. [3] இந்த அருவியின் அருகிலுள்ள மற்றொரு ஈர்ப்பு பாலருவி ஆகும். [4]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]