உள்ளடக்கத்துக்குச் செல்

பூமுள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூமுள்ளி ( மலையாளம்: പൂമുള്ളി ) என்பது ஒரு நம்பூதிரி குடும்பமாகும், இதன் தோற்றம் 900 ஆண்டுகளுக்கும் முந்தையது . பூமுள்ளி என்ற பெயரானது கேரளத்தின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் நெருக்கமாக தொடர்புடையது.

ஆரம்பகால வரலாறு[தொகு]

பூமுள்ளி மனை என்பது சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பெருவனம் கிராமத்தின் ஊரகத்தில் வசித்த ஒரு நம்பூதிரி குடும்பம் ஆகும். அவர்கள்தான் அம்மா திருவடி கோயிலைக் கட்டியவர்கள். தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் கோயிலுக்கு விட்டுவிட்டு, கோயில் நிர்வாகத்தை கொச்சி இராச்சியத்திற்குக் கொடுத்தார்கள். பின்னர் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறி, இன்றைய பாலக்காட்டின் ஒற்றைப்பாளத்தின் அருகில் உள்ள பெரிங்கோடில் குடியேறினர்.

நாட்டுப்புற நம்பிக்கை[தொகு]

நம்பூதிரி (பெருவனம் கிராமத்தில் இருந்தபோது) காமாட்சி அம்மன் கோயிலைப் பார்க்க காஞ்சிபுரத்திற்குச் சென்றதாக தொன்மம். [1] நம்பூர்த்தியின் பக்தியால் மகிழ்ச்சியடைந்த காஞ்சி காமாட்சி அவரது பனை ஓலை குடையில் கேரளத்திற்கு வர முடிவு செய்தார். வீட்டை அடைந்த நம்பூதிரி, குடையை தனது வீட்டின் தரையில் வைத்தார். பின்னர் மீண்டும் குடையை எடுக்க முடியவில்லை. அது தரையில் பெரிதும் பதிந்திருந்தது. பின்னர் மேற்கொண்ட விசாரணையில் காஞ்சி காமாட்சி அந்த குடையில் வசிப்பது தெரியவந்தது. அன்றிரவு நம்பூதிரியின் கனவில் வந்த தெய்வம், தனக்கு அவர் ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்று குறிபிட்டது, மேலும் ஊரகத்தை விட்டு வெளியேறினால், அவர் கிணற்றில் ஒரு விக்கிரகத்தைக் கண்டுபிடிப்பார் என்பதையும், குடையிலிருந்து தெய்வத்தை அந்த சிலைக்கு மாற்றுவேண்டும் என்றும் அவருக்கு குறிப்பிட்டது. தேவி விரும்பியபடி நம்பூதிரி செய்தார், அவர் கோவிலைக் கட்டினார், தனக்குச் சொந்தமான அனைத்தையும் கோவிலுக்கு கொடுத்துவிட்டார்.

பிற்கால வரலாறு[தொகு]

பூமுள்ளி மனை பின்னர் கேரளத்தின் பணக்கார மற்றும் செல்வாக்குவாய்ந்த நம்பூதிரி குடும்பங்களில் ஒன்றாகவும் மலபாரின் மிகப்பெரிய நில உரிமையாளர்களில் ஒன்றாகவும் வளர்ந்தது. கோழிக்கோட்டின் சமூத்திரிகள் அரசவையில் அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும், திருவிதாங்கூர் மன்னராலும் இந்தக் குடும்பத்தின் தலைவர் அழைக்கப்பட்டார். குடும்பம் விருந்தோம்பலுக்கு நன்கு அறியப்பட்டது. இவர்கள் அண்ண- தானத்தை தங்களின் தர்மமாக கருதினர். பூமுள்ளி குடும்பத்தினர் கலை, அறிவியலை ஊக்குவிப்பதில் ஈடுபட்டனர். பூமுள்ளி மனையின் உறுப்பினர்கள் ஆயுர்வேதம், ரிக்-வேதம், யோகா, களரி (தற்காப்பு கலை) இசை மற்றும் பிற கலாச்சார கலைகளில் பயிற்சியாளர்களாகவும், நிபுணர்களாகவும் இருந்தனர். இந்த வீட்டைச் சேர்ந்த மறைந்த திரு பூமுள்ளி நாராயணன் நம்பூதிரிப்பாத் ( ரிக்-வேத பயிற்சியாளர் அரம்தாம்புரானின் தந்தை), மறைந்த திரு. பூமுள்ளி ராமன் நம்பூதிரிபாத், இசைக்கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதரின் மாணவர், மறைந்த ஆயுர்வேத பயிற்சியாளரான பூமுள்ளி நீலகண்டன் நம்பூதிரிபாத் (அரம்தாம்புரன்) போன்றவர்கள் நன்கு அறியப்பட்டவர். ஆயுர்வேத சிகிச்சைகள், கலை மற்றும் கலாச்சார வடிவங்களில் பயிற்சி பெறுவதற்காக உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்து பலர் பூமுள்ளி மனைக்கு வருகிறார்கள்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Poomully Mana, Palakkad, Traditional House, Nambuthiri Families". Kerala Tourism (in ஆங்கிலம்). 2019-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
  • "Stately reminders of aristocracy" (Press release). The Hindu Sunday Magazine. 9 July 1995.
  • "Old world charm" (Press release). The Hindu, Friday Features. 3 December 1993.
  • "Peruvanam Graamam". Namboothiri Websites Trust, Calicut. 2006-03-30. பார்க்கப்பட்ட நாள் 2006-09-29. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  • "Ormakalile Poomulli Mana" (Press release). Mathrubhumi, Vaaranthapathippu. 16 June 1996.

Sankunni, Kottarathil (1996). Urakath Ammathiruvadi, Aithhyamala. Thrissur: Current Books.

  • {{cite book}}: Empty citation (help)
  • "Tharaprabhayillathe Vikram Poomully Manayil" (Press release). Mathrubhumi. 6 October 2016.
  • "Poomully Perumayude Peringottu Anyanallathe Vukram" (Press release). Manorama Daily. 6 October 2016.

https://www.youtube.com/watch?v=UC3TPqKmoYA https://www.youtube.com/watch?v=ZuxgqfZoTMA

https://www.youtube.com/watch?v=dv4GCywBVKk

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமுள்ளி&oldid=3045146" இலிருந்து மீள்விக்கப்பட்டது