ஓணத்தள்ளு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓனத்தள்ளு அல்லது அவிட்டத்தள்ளு என்பது ஒரு திருவிழா [1] ஆகும். இதை தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் சித்தூர் வட்டத்தில் பல்லசேனா தேசத்தின் நாயர்கள் கொண்டாடும் ஒரு விழா ஆகும். [2] .

வரலாறு[தொகு]

இந்த திருவிழா என்பது கோலதிரிகளின் போர்ப் படையின் ஒரு பகுதியாக அவர்கள் வழிநடத்தி, போராடிய ஏராளமான போர்களை நினைவுகூரும் வகையில் இந்த பிராந்தியத்தின் நாயர் பின்பற்றிய ஒரு பாரம்பரியமாகும் . பல்லசனா என்ற பெயர் கொண்ட இந்த குழுவினர் வரலாற்று ரீதியாக பல்லவர் சேனை அல்லது பல்லவர் போர் படையைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கிறது, இன்று இது பல்லசனா அல்லது பல்லசேனாவாக மருவியுள்ளது.

போர்ச் சடங்கு[தொகு]

இந்த பாரம்பரியம் நிகழ்வானது வேட்டக்கருமன் தேவசவம் கோயில் வளாகத்தில் நாயர் சமூகத்தைச் சேர்ந்த ஆடவர்களால் நிகழ்த்தப்படும். இது போர்க்குணமிக்க நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. இந்த நிகழ்வின் முக்கிய அங்கமாக ஆடவர் இணைவதும், சமூகத்தில் உள்ள மூத்தவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், கைகலப்பு, போர் முழக்கம், போர் போன்ற செயல்கள் போன்றவற்றைக் கொண்டது. இது சம்பந்தப்பட்ட ஆடவர்களால் ஒரு வழிவாடுவாகக் காணப்படுகிறது. மேலும் இது ஓணத்தின் அவிட்டம் நட்சத்திரத்தின் போது மிகவும் மதிக்கப்படும் மற்றும் கலந்து கொள்ளும் திருவிழாவாகும்.

குறிப்புகள்[தொகு]

  1. Reporter, Staff; Reporter, Staff (11 September 2011). "'Onathallu' revisited with enthusiasm". The Hindu (ஆங்கிலம்). 15 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. Prajina, P. "The legend behind Kerala's own wrestling sport 'Onathallu'". Mathrubhumi. Mathrubhumi. 2017-12-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-09-27 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓணத்தள்ளு&oldid=3594104" இருந்து மீள்விக்கப்பட்டது