பெரும்தேனருவி
பெரும்தேனருவி | |
---|---|
പെരുന്തേനരുവി | |
![]() வச்சூச்சிறா அருகே பெருந்தேனருவி | |
அமைவிடம் | வச்சூச்சிறா |
வகை | அருவி |
பெருந்தேனருவி ( மலையாளம்: പെരുന്തേനരുവി ) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், நடுதிருவாங்கூரின், பத்தனம்திட்டா மாவட்டத்ததில் உள்ள ஒரு அருவி ஆகும். இது பத்தனம்திட்டாவிலிருந்து வச்சூச்சிறா செல்லும் பாதையில் 36 கி.ஈ ((22 மைல்) தொலைவில் உள்ளது. இது எருமேலியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ராணி தாலுகாவின் வெச்சூச்சிர பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இந்த அருவியின் ஒரு கரை குடமுருட்டி, மற்றொன்று வச்சூச்சிறா. இந்த அருவிக்கான பிரதான பாதை ராணி - அத்திக்காயம் - குடமுருட்டி - பெருந்தேனருவி ஆகும். மிகவும் அமைதியான சூழ்நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட இது ஒரு சிறந்த இடம்.
சொற்பிறப்பியல்[தொகு]
பெருந்தேன் மற்றும் அருவி ஆகிய இரண்டு மலையாள சொற்களின் சேர்கையில் உருவானதே பெருந்தேனருவி என்ற பெயராகும்.
இடம்[தொகு]
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சஹாயத்ரி மலைத்தொடரின் அமைந்துள்ளது பெருந்தேனருவி. இந்த அருவியானது இதன் உயரத்தை விட பரந்த பகுதிக்கு பெயர் பெற்றது. இது கேரள மாநிலத்தின் பதனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அருவி நீர் பின்னர் பாம்பை ஆற்றுடன் சேர்கிறது. இந்த அருவி அழகும், ஆபத்தும் நிறைந்தது. [1]
படக்காட்சியகம்[தொகு]
குறிப்புகள்[தொகு]
- ↑ "General features — Kerala". Government of Kerala. 2006-11-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-27 அன்று பார்க்கப்பட்டது.