திருச்சூர் விலங்கு காட்சியகம்
திருச்சூர் விலங்கு காட்சியகம் | |
---|---|
திருச்சூர் விலங்கு காட்சியகத்தின் முகப்பு | |
10°31′48″N 76°13′22″E / 10.529965°N 76.2227529°E | |
திறக்கப்பட்ட தேதி | 1885[1] |
அமைவிடம் | இந்தியா, கேரளம், திருச்சூர் |
நிலப்பரப்பளவு | 13.5 ஏக்கர்கள் (5.5 ha)[2] |
ஆண்டு பார்வையாளர்கள் | 2,000 (ஒரு நாளைக்கு) [3] |
உறுப்புத்துவங்கள் | CZA[4] |
முக்கிய கண்காட்சிகள் | வனவிலங்கு |
வலைத்தளம் | www |
திருச்சூர் மிருகக்காட்சிசாலை (Thrissur Zoo) அல்லது மாநில அருங்காட்சியகம் மற்றும் உயிரியல் பூங்கா, திருச்சூர் (முன்னர் திருச்சூர் உயிரியல் பூங்கா ) என்பது 13.5-ஏக்கர் (5.5 ha) பரப்பளவில் 1885 ஆம் ஆண்டு திறக்கபட்ட ஒரு உயிரியல் பூங்காவாகும். இது இந்தியாவின், கேரளத்தின், திருச்சூர் நகரத்தின் மையத்தில் செம்புகாவு என்ற சிறிய பகுதியில் திறக்கப்பட்டது. இது நாட்டின் பழமையான உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். இங்கு பல வகையான விலங்குகள், ஊர்வன, பறவைகள் போன்றவை உள்ளன. இந்த விலங்குகாட்சிசாலையுடன் இணைந்து ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகமும், பிராந்தியத்தின் சமூக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு கலை அருங்காட்சியகமும் உள்ளடக்கியதாக உள்ளது. திருச்சூர் உயிரியல் பூங்காவானதுதிருச்சூர் நகர மையத்திலிருந்து 2 கிலோமீட்டர் (1.2 மைல்) தொலைவில் உள்ளது. இது வார நாட்களில் திங்கள் கிழமைகளைத் தவிர்த்து காலை 10:00 மணி முதல் மாலை 5:15 மணி வரை திறந்திருக்கும். கேரள மாநிலத்தில் உள்ள இரண்டு விலங்கியல் பூங்காக்களில் இதுவும் ஒன்றாக இருப்பதால், இது பல பார்வையாளர்களை ஈர்ப்பதாக உள்ளது. ஒளிப்படம் மற்றும் காணொளி கருவிகளானது சிறிய கட்டணத்துடன் உள்ளே கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுகின்றது.
காட்சிகல்கள்
[தொகு]விலங்குகாட்சிசாலையில் ஒரு விலங்கியல் தோட்டம், தாவரவியல் பூங்கா, கலை அருங்காட்சியகம், இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன.
விலங்குகள்
[தொகு]திருச்சூர் உயிரியல் பூங்காவில் புலிகள், மான்கள், சிங்கங்கள், தேன் கரடிகள், குரங்குகள், நீர்யானைகள், ஒட்டகங்கள், நாகங்கள், கட்டுவிரியன்கள், விரியன்கள், சாரைப்பாம்புகள், இளஞ்சிவப்பு பூநாரைகள், வடகிழக்கு மலைகளின் கயால், சோலைமந்தி ஆகியவை உள்ளன. பாம்புகளுக்காக ஒரு தனிக் கட்டிடமும் உள்ளது.
பறவைகள்
[தொகு]இங்கு மயில், கூழைக்கடா, கிளி, இருவாய்ச்சி கொக்கு போன்ற பல்வேறு வகையான பறவைகள் உள்ளன.
ஓய்வு இடங்கள்
[தொகு]கம்பீரமான இருக்கைகளுடன் கூடிய இரண்டு அழகான இடங்கள் மூத்த குடிமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அவர்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் அமர்ந்து ஓய்வெடுத்து விலங்குகாட்சிசாலையின் காட்சிகளை கண்டு களிக்கலாம்.
எதிர்காலம்
[தொகு]அருகிலுள்ள புத்தூரில் மிருகக்காட்சிசாலைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனால் மிருகக்காட்சிசாலையின் அளவானது தற்போதைய 13.5 ஏக்கர்கள் (5.5 ha) ) என்பதிலிருந்து 306 ஏக்கர்கள் (124 ha) வரை விரிவாக்கம் அடையும். புதிய மிருகக்காட்சிசாலையானது பீச்சி அணை, கேரள வன ஆராய்ச்சி நிறுவனம், கேரள வேளாண் பல்கலைக்கழக வனவியல் கல்லூரி மற்றும் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லூரிக்கு அருகில் இருக்கும்.
படக்காட்சியகம்
[தொகு]-
சுவரோவியங்கள்
-
ஆசிய சிங்கம்
-
இளஞ்சிவப்பு பூநாரை
-
ஊதா ஹெரான்
-
முள்ளம்பன்றி
-
இந்திய மயில்
குறிப்புகள்
[தொகு]- ↑ "List of Zoos in India, from 1800 until now". kuchbhi.com. Kuchbhi. Archived from the original on 21 October 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2011.
- ↑ "State Museum and Zoo". thrissurkerala.com. ThrissurKerala.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2011.
- ↑ "Thrissur zoo buys emus to pull in crowds". டைம்ஸ் ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 2012-02-05.
- ↑ "Search Establishment". cza.nic.in. CZA. பார்க்கப்பட்ட நாள் 5 July 2011.