முண்டக்கல் கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முண்டக்கல் கடற்கரை (மலையாளம்  : മുണ്ടയ്ക്കല് ബീച്ച്), என்பது கேரளத்தின், கொல்லம் நகரத்தில் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றும், கேரளத்தின் பிரபலமான ஒரு சுற்றுலா மையமாகும். இந்த கடற்கரை முண்டக்கலில் அமைந்துள்ளது, இது கொல்லத்தின் ஒரு முக்கியமான புறநகர் பகுதியாகவும், முந்திரி பதப்படுத்தும் மையமாகவும் உள்ளது. 21 ஜூன் 2016 அன்று 'ஹன்சிதா' என்ற தூர்வாரி கப்பல் இந்தக் கடறவகரையில் தரைதட்டிய பின்னர் முண்டக்கல் கடற்கரை உலகப் புகழ் பெற்றது. [1] டிரெட்ஜர் கப்பலை அகற்றும் பணி 18 அக்டோபர் 2017 அன்று தொடங்கியது. [2] இந்த கடற்கரை 'முண்டக்கல் பாபனாசம் கடற்கரை' என்றும் அழைக்கப்படுகிறது. முண்டக்கல் பாபனாசம் கடற்கரையின் நீரில் நீராடுவது ஒருவர் செய்த பாவங்களை நீக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். [3]

அமைவிடம்[தொகு]

கொல்லம்-பரவூர் கடற்கரைச் சாலையின் ஓரத்தில் முண்டக்கல் கடற்கரை அமைந்துள்ளது. இந்தக் கடற்கரை சுமார்   சின்னகடாவிலிருந்து 4 கி.மீ தொலைவிலும், பரவூரிலிருந்து 11.2 கி.மீ. தொலைவிலும் உள்ளது [4]

முக்கியத்துவம்[தொகு]

'ஹன்சிதா' என்ற தூர்வாரிக் கப்பல் கரை தட்டியதன் காரணமாக கடற்கரை இப்போது கொல்லம் நகரத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகியுள்ளது. இந்த கப்பல் நவம்பர் 2013 முதல் கொல்லம் கடற்கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்தது. [5] கடும் அலைகளின் காரணமாக, இந்தக் கப்பல் ஜூன் 2016 இல் முண்டக்கல் கடற்கரையில் கரை ஒதுங்கியது. [6]

வருடாந்திர 'பலிதர்பணம்' சடங்கிற்கு இந்த கடற்கரை ஒரு முக்கியமான இடமாகும். இந்து மத நம்பிக்கைகளின்படி, மலையாள மாதமான கார்கிடகோமில் அமாவாசை நாளில் செய்யப்படும் இந்தச் சடங்கு தங்கள் முன்னோர்களின் ஆத்மாக்களை சாந்தியடையச் செய்யும் மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருமுல்லாவரம் கடற்கரை, முண்டக்கல் கரை, கேரளத்தின் பிற பிரபல கடற்கரைகள், ஆற்றங்கரைகளில் 'பலி தர்பணம்' வழங்குகிறார்கள். [7]

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முண்டக்கல்_கடற்கரை&oldid=3036536" இருந்து மீள்விக்கப்பட்டது