குடமுட்டி அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடமுட்டி அருவி
Kudamutty Falls
அமைவிடம்இந்தியா, கேரளம், அம்பநாடு மலைகள்
வீழ்ச்சி எண்ணிக்கை1
நீர்வழிஅச்சன்கோவில் ஆறு

குடமுட்டி அருவி (Kudamutti Falls) என்பது இந்தியாவின், கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தில் உள்ள அழகிய அம்பநாடு மலைகளில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். இது ஒரு பருவகால அருவி ஆகும் . இந்த அருவி ஒரு பெரிய தனியார் தோட்டத்திற்குள் அமைந்துள்ளது, பார்வையாளர்கள் தனியார் தோட்டத்தின் வழியாகவே அருவியை அடைய வேண்டும். குடமுட்டி அருவி அம்பானாடு மலைப்பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். [1]

அருவி அமைந்துள்ள நிலத்தின் உரிமையைப் பற்றி கேரள வன மற்றும் வனவிலங்குத் துறைக்கும் தனியார் தோட்ட உரிமையாளருக்கும் இடையே தகராறு நடந்து வருகிறது. இந்த அருவி தங்களது தனி உரிமை சொத்து என்று தோட்ட நிருவாகத்தினர் கூறுகின்றனர், மேலும் அவர்கள் அதை தங்கள் தோட்ட சுற்றுலா திட்டத்தில் சேர்த்துள்ளனர். ஆனால் அருவியின் இருப்பிடம் வனப்பகுதியில் இருப்பதாக வனத் துறை கூறுகிறது, அதற்கான செல்லிடங்காட்டி ஆதாரம் அவர்களிடம் உள்ளதாக கூறுகிறது. [2]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடமுட்டி_அருவி&oldid=3537349" இருந்து மீள்விக்கப்பட்டது