திருச்சூர் விலங்கியல் பூங்கா வனவாழ்வுயிர்ப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருச்சூர் விலங்கியல் பூங்கா வனவாழ்வுயிர்ப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்
இடம்திருச்சூர் நகர், புத்தூர்
பரப்பளவு336 ஏக்கர்கள்
உறுப்பினர் திட்டம்CZA[1]
முக்கிய காட்சிகள்வனவாழ்வுயிர்
இணையத்தளம்www.keralamuseumandzoo.org

திருச்சூர் விலங்கியல் பூங்கா வனவாழ்வுயிர்ப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், புத்தூர் (Thrissur Zoological Park Wildlife Conversation & Research Centre) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூர் நகரின் புத்தூரில் அமைக்கபடவுள்ள ஒரு விலங்கியல் பூங்கா ஆகும். கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களும் தற்போது கலாச்சார விவகார அமைச்சினால் நிர்வகிக்கப்படுகின்றன, இது கேரள மாநில வன மற்றும் வனவிலங்குத் துறையால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் முதல் மிருகக்காட்சிசாலையாகும்.

வரலாறு[தொகு]

திருச்சூர் நகரின் மையப்பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருச்சூர் விலங்கு காட்சியகம் அமைந்துள்ள இடம் இதற்கு பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. வானூர்திகளின் போக்கு போன்றவற்றால் எழும் ஒலிகள் விலங்குகளை பாதிக்கின்றன எனப்பட்டது. வருவாய் துறையின் நிலம் கிடைக்காததால், மிருகக்காட்சிசாலையானது புதூரில் 336 ஏக்கர் வன நிலத்திற்கு மாற்றப்படுகிறது. இதன்மூலம், மிருகக்காட்சிசாலையின் மேலாண்மையானது கேரள வன மற்றும் வனவிலங்குத் துறையிடம் ஒப்படைக்கப்படும். 2003 ஆம் ஆண்டில் இந்த விலங்கியல் பூங்கா குறித்த அறிவிப்பை அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் கே. சுதாகரனால் அறிவிக்கப்பட்டது . புதூரில் உள்ள 150 ஏக்கர் வன நிலத்தில் இந்த திட்டம் வரும். விலங்கியல் பூங்காவை ஆத்திரேலியாவைச் சேர்ந்த முன்னணி சர்வதேச உயிரியல் பூங்கா வடிவமைப்பாளர் ஜான் கோ வடிவமைத்துள்ளார். [2] [3] [4] [5] [6] புத்தூரில் 336 ஏக்கரில் இந்த மிருகக்காட்சி சாலை 130 கோடி ரூபாய் செலவில் வருகிறது.

திட்டம்[தொகு]

விலங்கியல் காட்சியகமும், பூங்காவும் மூன்று கட்டங்களாக கட்டப்படும். கேரள அரசு 2013 ஆம் ஆண்டில் முதல் கட்டமாக விலங்கியல் பூங்காவிற்கு ரூ .5 கோடியை விடுவித்தது. இந்தப் பணிகள் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் போது ரூ .150 கோடிகள் செலவாகும். இந்த நிதியை ஒன்றிய அரசு வழங்கும். முதல் கட்டமாக, நுழைவுச்சீட்டு தருமிடம், சுவர்கள் கட்டுமானம், பக்கவாட்டாக, உணவு விடுதி, வளர்ப்பு விலங்குகளுக்கான அடைப்புகள் போன்றவை கட்டப்படும். இந்த இடங்கள் 10 ஏக்கரில் இருக்கும். அடைப்புப் பகுதிகளின் வேலை முடிந்த பிறகு திரிசூர் மிருகக்காட்சிசாலையில் இருந்து விலங்குகள் இங்கு மாற்றப்படும். இரண்டாம் கட்டமாக, பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் கட்டுமானங்கள் கட்டப்படும். மிருகக்காட்சிசாலையின் மொத்த கட்டுமான செலவுகள் ரூ .300 முதல் 350 கோடி வரை ஆகும். [7]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]