ஆலப்புழா கடற்கரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலப்புழை நகரத்தில் மேற்குப் பாகத்திலுள்ள கடற்கரையே ஆலப்புழை கடற்கரை என்றழைக்கப்படும். ஆலப்புழை நகரத்தின் முதன்மையான பொழுதுபோக்கிடங்களில் இதுவும் ஒன்றாகும். புகழ்பெற்ற ஆலப்புழை கடற்பாலம், ஆலப்புழை கலங்கரை விளக்கம் ஆகியவை இங்கு அமைந்திருக்கின்றன. [1]
இக் கடற்கரையில் பல பிரபல மலையாள, தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்திருக்கின்றன. ஆலப்புழா கீழைத் தேசங்களின் வெனிஸ் நகரம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆலப்புழா காயல் நாட்டுப் பக்கத்தில் ஏராளமான தனித்துவமிக்க விலங்குகள், பறவையினங்கள் வாழ்கின்றன. இக் கடற்கரைக்கு ஆண்டு முழுவதும் இந்தியா முழுவதிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
குறிப்புகள்[தொகு]
- ↑ "சுற்றுலா இணையதளம்". 2014-02-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-27 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலப்புழா_கடற்கரை&oldid=3543030" இருந்து மீள்விக்கப்பட்டது