திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா
திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா | |
---|---|
![]() திருவனந்தபுரம் மிருகக்காட்சிசாலையில் விலங்குகளின் தொகுப்பு. மேலே இருந்து கடிகார திசையில்: இந்தியச் சிறுத்தை, செம்முகக் குரங்கு, சிறுத்த பெருநாரை, சோலைமந்தி. | |
![]() | |
8°30′43″N 76°57′18″E / 8.512°N 76.955°E | |
திறக்கப்பட்ட தேதி | 1857[1] |
அமைவிடம் | இந்தியா, கேரளம், திருவனந்தபுரம் |
நிலப்பரப்பளவு | 55 ஏக்கர்கள் (22 ha)[2] |
உயிரினங்களின் எண்ணிக்கை | 82[2] |
உறுப்புத்துவங்கள் | CZA[3] |
திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா (Thiruvananthapuram Zoo) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஒரு உயிரியல் பூங்காகா ஆகும். இது 55 ஏக்கர்கள் (22 ha) பரப்பளவில் வனப்பகுதி, ஏரிகள், புல்வெளிகள் பொன்றவற்றைக் கொண்டதாக உள்ளது.
வரலாறு[தொகு]
திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா இந்தியாவின் பழமையான உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். இதேபோல், அருங்காட்சியகமும், தாவரவியல் பூங்காவும் நாட்டின் மிகப் பழமையானவைகளில் ஒன்றாகும். திருவனந்தபுரம் அருங்காட்சியகம் மற்றும் மிருகக்காட்சிசாலையை நிறுவியதன் பின்னணியில் 1830-1846 காலப்பகுதியில் திருவாங்கூரை ஆண்ட புகழ்பெற்ற மன்னரும், இசை அமைப்பாளரான சுவாதித் திருநாள் ராம வர்மா, (1816-1846) இருந்தார். இவர் குதிரை வளர்ப்பில் யானைகள் உள்ளிட்ட விலங்குகளை வளர்பதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். திருவனந்தபுரம் தொழுவத்தோடு அவர் ஒரு காட்டு விலங்குக் காட்சிச் சாலையை இணைத்திருந்தார். இதில் புலிகள், சிறுத்தைகள், மான், கரடிகள், ஒரு சிங்கம் போன்றவற்றை வைத்திருந்தார். இருப்பினும் இவை அவரது சகோதரர் உத்திரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மற்றும் அப்போதைய பிரித்தானிய ரெசிடின்சியல் ஜெனரல் கல்லீன் ஆகியோரின் பொறுப்பில் விடப்பட்டது, இதன் விளைவாக திருவனந்தபுரத்தில் நேப்பியர் அருங்காட்சியகம் மற்றும் விலங்குக் காட்சிச்சாலை நிறுவப்பட்டது. 1855 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் மன்னரை புரவலராகவும், ஜெனரல் கல்லானைத் தலைவராகவும், இளவரசரை துணைத் தலைவராகவும், திரு. ஆலன் பிரவுன் கமிட்டியின் செயலாளராகவும், அருங்காட்சியக இயக்குநராகவும் ஒரு குழு அமைக்கப்பட்டது. செப்டம்பர் 1857 இல் இந்த அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. ஆனால் அருங்காட்சியகம் மக்களை அதிகம் ஈர்க்கவில்லை. எனவே 1859 ஆம் ஆண்டில் மிருகக்காட்சிசாலையுடன் ஒரு பூங்காவும் தொடங்கப்பட்டது. மிருகக்காட்சிசாலை முதலில் அந்த காலத்தில் நடைமுறையில் இருந்த வழக்கமான இரும்பு கூண்டுகளுடன் அமைக்கபட்டது. மேலும் இது பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் மனித வளர்ச்சியால் காடுகள் மற்றும் வனவிலங்குகளின் பேரிழப்பால், மிருகக்காட்சிசாலையின் குறிக்கோள் பொழுதுபோக்கு என்பதிலிருந்து பாதுகாப்பு என மாறியது. [ மேற்கோள் தேவை ]
1995 இல் தொடங்கப்பட்ட நவீனமயமாக்கல் திட்டத்தின்படி, பழைய அடைப்புகளை படிப்படியாக விசாலமான இயற்கை சூழல்கொண்ட அடைப்புகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டதாக ஆனது. மத்திய உயிரியல் பூங்கா பொறுப்புக்கழகத்தின் நிதி, தொழில்நுட்ப உதவியுடன் கேரள மாநில அரசு இந்த புதுப்பிப்பை மேற்கொண்டு வருகிறது.
விலங்குகள்[தொகு]
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் உலகின் பலபகுதிகளைச் சேர்ந்த 82 விலங்கினங்கள் உள்ளன. மிருகக்காட்சிசாலையில் உள்ள உள்நாட்டு இனங்களில் சோலைமந்தி, நீலகிரி மந்தி, இந்திய காண்டாமிருகம், ஆசியச் சிங்கம், வங்காளப் புலி, வெள்ளைப் புலி, [4] சிறுத்தை, அத்துடன் ஒன்பது ஆசிய யானைகள் (மார்ச் 31, 2009 வரை) ஆகியவை அடங்கும். 2020 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்க விலங்கினங்களான ஒட்டகச்சிவிங்கிகள், நீர்யானை, வரிக்குதிரைகள் மற்றும் கேப் எருமைகள் போன்றவை இருந்தன .
மிருகக்காட்சிசாலையில் பாம்புப் பண்ணையும் உள்ளது, இது விஷமுள்ள, விஷமற்ற பாம்புகளைக் கொண்டுள்ளது. இதில் 7 அனகோண்டாக்களையும் கொண்டுள்ளது.


பறவைகள்[தொகு]



- தீக்கோழி
- ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி
- பச்சை-இறக்கைகள் ஐவண்ணக்கிளி
- இந்திய மயில்
- வெள்ளை கரண்டிவாயன்
- பெரும் பூநாரை
- காசோவரி
- மஞ்சள்கொண்டை கிளி
- கருவால் பெருங்கொக்கு
- வெள்ளை கழுத்து கொக்கு
- கருப்பு கழுத்து கொக்கு
- சாம்பல் நாரை
- வெள்ளை அரிவாள்மூக்கன்
- பிளாசம் ஹெட்டட் கிளி
- பச்சைக்கிளி
- அலெக்ஸாண்ட்ரின் கிளி
- மீசை கிளி
- சாம்பல் கூழைக்கடா
- ரோஸி கூழைக்கடா
- வெள்ளி ஃபெசண்ட்
- மோதிரக்-கழுத்து ஃபெசண்ட்
- மாடப்புறா
- பெருநாரை
- மஞ்சள் மூக்கு நாரை
- வெள்ளை நாரை
- வெள்ளை கழுத்து நாரை
- கருப்பு கழுத்து நாரை
- சினேரியஸ் பாறு
- இராஜ பாறு
- வெள்ளை முதுகு பாறு
- துருக்கி பாறு
- கரும்பருந்து
- செம்பருந்து
- ஈமு
ஊர்வன[தொகு]
- அனகோண்டா
- இராச மலைப்பாம்பு
- செம்மூக்கு முதலை
- சதுப்புநில முதலை
- கண்கவர் முதலை
- உடும்பு
- புல்விரியன்
- இந்திய நாகம்
- இந்திய மலைப்பாம்பு
- சாரைப் பாம்பு
- கண்ணாடி விரியன்
- கண்டங்கண்டை நீர்கோலி
- ராஜ நாகம்
- இருதலை மணியன்
- பச்சை மரம் பாம்பு
- இந்திய ஃபிளாப்ஷெல் ஆமை
- இந்திய கருப்பு ஆமை
- மகுட நதி ஆமை
- திருவிதாங்கூர் ஆமை
கேலரி[தொகு]
-
திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா வளாகம்
-
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை
-
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் நீர்யானை
-
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் காண்டாமிருகம்
-
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் கேளையாடு
-
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் சிறுத்தை
-
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் காணப்படும் செம்பருந்து
-
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் இந்தியன் காடெருது
-
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் உள்ள மான்கள்
-
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் நீர்யானைகள்
-
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் இந்தியன் காடெருதுகள்
-
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் கடமான் மந்தை
-
மான்களுக்கு உணவளித்தல்
-
திருவனந்தபுரம் மிருகக்காட்சிசாலையில் நடக்கும் புலி
குறிப்புகள்[தொகு]
- ↑ "List of Zoos in India, from 1800 until now". kuchbhi.com (Kuchbhi) இம் மூலத்தில் இருந்து 21 October 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111021205725/http://kuchbhi.com/india/61-articles/258-list-of-zoos-in-india-from-1800-until-now.html. பார்த்த நாள்: 4 July 2011.
- ↑ 2.0 2.1 "Zoo". keralamuseumandzoo.org (Department of Museums and Zoos, Government of Kerala) இம் மூலத்தில் இருந்து 31 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171231032405/http://www.keralamuseumandzoo.org/. பார்த்த நாள்: 1 October 2010.
- ↑ "Search Establishment". cza.nic.in (CZA). http://cza.nic.in/htmlreports/htmlsearchzoo.aspx. பார்த்த நாள்: 5 July 2011.
- ↑ "White Tiger Arrives in Zoo". The New Indian Express. 28 October 2014. http://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2014/oct/28/White-Tiger-Arrives-in-Zoo-676111.html. பார்த்த நாள்: 23 December 2018.