தண்ணீர்முக்கோம் கரை

ஆள்கூறுகள்: 9°40′30″N 76°23′53″E / 9.675°N 76.398°E / 9.675; 76.398
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தண்ணீர்முக்கோம் கரை
ஏரியின் தென்மேற்கில் இருந்து தாண்ணீர்முக்கோம் நீர்தேக்கத்தின் தோற்றம்
தண்ணீர்முக்கோம் கரை is located in இந்தியா
தண்ணீர்முக்கோம் கரை
Location of தண்ணீர்முக்கோம் கரை in இந்தியா
தண்ணீர்முக்கோம் கரை is located in கேரளம்
தண்ணீர்முக்கோம் கரை
தண்ணீர்முக்கோம் கரை (கேரளம்)
நாடுஇந்தியா
அமைவிடம்கேரளம், குட்டநாடு
புவியியல் ஆள்கூற்று9°40′30″N 76°23′53″E / 9.675°N 76.398°E / 9.675; 76.398

தண்ணீர்முக்கோம் கரை (Thanneermukkom Bund) என்பது தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தின், ஆலப்புழை மாவட்டதில் கட்டபட்டுள்ள ஒரு கட்டுமானமாகும். இது குட்டநாடு அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது, மேற்கில் தண்ணீர்முக்கோமும் கிழக்கில் வெச்சூருக்கும் இடையில் வேம்பநாட்டு ஏரியின் குட்டானாட்டின் தாழ்வான பகுதிகளுக்குள் உப்பு நீர் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக இது கட்டபட்டுள்ளது. தண்ணீர்முகோம் கரையானது 1974 இல் கட்டப்பட்டு, 1976 முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இது இந்தியாவின் மிகப்பெரிய மண் சீராக்கி ஆகும். இந்தக் கரையானது ஏரியை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது - ஒன்று உப்புநீரைக் கொண்டது, மற்றொன்று ஏரிக்கு ஆறுகளால் கொண்டுவரப்படும் நண்ணீரைத் தேக்குவது ஆகும்.

நிலவியல்[தொகு]

இது இந்தியாவின், கேரளத்தின், குட்டநாட்டின் 9°40′21″N 76°23′49″E / 9.67250°N 76.39694°E / 9.67250; 76.39694 இல் அமைந்துள்ளது. இந்தக் கரைத் தடுப்பானது வேம்பநாடு ஏரியை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, முன்னால் உள்ள பகுதியை ஒரு புதிய கரையோர நீர்த்தேக்கமாக ஆக்குகிறது.[1][2] இது தற்போதய இந்தியாவில் ஒரே ஒரு கடலோர நீர்த்தேக்கம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இது வேம்பநாடு ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது கோட்டயம் மாவட்டத்தின் வைகோம் வட்டத்தின் வெச்சூரையும், அலப்புழா மாவட்டத்தின், செர்த்தலா வட்டத்தின் தானெர்முக்கோமையும் சேர்த்ததாக உள்ளது. இதை கோட்டயம் நகரம், ஆலப்புழா அல்லது சேர்த்தலையிருந்து சாலை வழியாக அடையலாம். குறிப்பிடப்பட்ட எல்லா இடங்களிலிருந்தும் அடிக்கடி பேருந்து சேவை உள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு[தொகு]

பதிரமணல் தீவில் இருந்து தண்ணீர்முக்கோமின் தோற்றம்

இந்த கரைத்தடையானது குட்டநாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உதவியாக உள்ளது - இங்கு கடல் மட்டத்திற்கும் கீழே விவசாயம் நடைபெறுகிறது. இருப்பினும் இது சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளது, முதன்மையாக, புதிய நீரில் நீர்ப்பூங்கோரை பரவுகிறது. பிராந்திய மக்களின் பிரதான உணவின் ஒரு பகுதியான மீன்கள் ஏராளமான இருந்த உப்பங்கழிகள் உள்ளன. மீன்களின் இனப்பெருக்கத்திற்கு சிறிய அளவு உப்பு நீரே உள்ள நிலை உருவாகியுள்ளது. உப்பு நீருக்கு ஏறபட்ட தடையானது இப்பகுதியில் மீன் பிடித் தொழிலை மோசமாக்கியுள்ளது, மேலும் மீனவர்கள் 2005 ஆம் ஆண்டு இந்த நீர்தேக்கக் கரையை எதிர்த்தனர்.[3]

உப்பு நீர் தடையானது உப்பங்கடல்களுடன் கடலின் இணைப்பை சீர்குலைத்து, உப்பு நீர் தடையினால் முன் எப்போதும் எதிர்பார்க்காத பிரச்சினைகளான நீர் களைகளின் பெருக்கம் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. முன்னர் கடலின் உப்புநீரானது உப்பங்கழிகளை சுத்தப்படுத்தி வந்தது. ஆனால் இது இனி நடக்காது என்பதால், இது உப்பங்கழிகள் மற்றும் அருகிலுள்ள முழு நிலப்பகுதிகளையும் மாசுபடுத்துகிறது.

வெள்ள நீர் வடிய மழைக்காலங்களில் கதவணைகள் திறக்கப்படுகின்றன, பின்னர் அவை சுமார் ஆறு மாதங்களுக்கு மூடப்படும்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்ணீர்முக்கோம்_கரை&oldid=3730521" இருந்து மீள்விக்கப்பட்டது